- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் திலீப்குமாருக்கு ஆப்ஷன் கொடுத்த கலாநிதி மாறன்.. தாராள மனசுக்காரரா இருக்காரே

நெல்சன் திலீப்குமாருக்கு ஆப்ஷன் கொடுத்த கலாநிதி மாறன்.. தாராள மனசுக்காரரா இருக்காரே

- Advertisement -

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கினார். அவற்றில் பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படத்தில் கமிட்டானார். விஜய்யை வைத்து சொதப்பியதுபோல் ரஜினியை வைத்து நெல்சன் சொதப்பிவிடக்கூடாது என ரஜினி ரசிகர்கள் நினைத்தனர்.

அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஜெயிலர் படத்தை உருவாக்கியிருந்தார் நெல்சன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்து விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது. இதன் காரணமாக ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகியிருப்பதால் தயாரிப்பு தரப்பும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. அதனால் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமாருக்கு செக்கையும் காரையும் பரிசாக கொடுத்தது. ரஜினிக்கு கொடுத்த செக்கில் ஜெயிலர் படத்தின் லாபத்தில் அவருக்கு சேர வேண்டிய பங்கான நூறு கோடி ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நெல்சனுக்கு கொடுத்த செக்கில் அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் இருக்கலாம் என கருதப்படுகிறது.

ரஜினிக்கு மொத்தம் இரண்டு பிஎம்டபிள்யூ காரினை காண்பித்தார் கலாநிதி மாறன். அவற்றில் ஒன்று எலக்ட்ரிக்கல் கார் என்றும் மற்றொன்று நார்மல் கார் என்று தெரிகிறது. அதில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை தேர்ந்தெடுத்தார் ரஜினி. அதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். ரஜினிக்கு ஏற்கனவே 6, 7 கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றியால் சன் பிக்சர்ஸின் அடுத்த படமும் ரஜினியுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில் ரஜினிக்கு கொடுத்த ஆப்ஷன் போலவே நெல்சன் திலீப்குமாருக்கும் கலாநிதி மாறன் ஆப்ஷன் கொடுத்தாராம். அதாவது லம்போர்கினி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, போர்ஷே ஆகிய கம்பெனிகளில் இருந்து தலா ஒரு கார் என மொத்தம் நான்கு காரை காண்பித்தாராம் கலாநிதி. அதில் போர்ஷே காரை தேர்ந்தெடுத்தாராம் நெல்சன். அதன் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

சற்று முன்