வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் வாத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதன் காரணமாக அந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பை கொடுக்கவில்லை. மேலும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்திவிடலாம் என எண்ணியிருந்த அவர் இதனால் ரொம்பவே அப்செட் ஆனார்.
அந்தப் படத்துக்கு பிறகு தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். படத்திற்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷுடன் சிவராஜ் குமார் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் டீசரானது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் வெளியானது. டீசரை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். பீரியட் படமாக உருவாகி இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையப்படுத்தி இந்த படம் இருக்கலாம் என்பதை டீசர் உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் சிவராஜ்குமார் நடிப்பை காண்பதற்கு ரசிகர்கள் இப்போதே காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேப்டன் மில்லர் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது. அதாவது தனுஷின் போர்ஷன் முடிந்துவிட்டாலும் அருண் மாதேஸ்வரன் இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டாராம்.
ஆனால் தயாரிப்பு நிறுவனமோ ஏற்கனவே ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிட்டோம் அதையும் மீறி சென்ற பட்ஜெட்டையும் கொடுத்துவிட்டோம் இனிமேல் நீங்கள் ஷூட்டிங் நடத்தினால் எங்களால் பணம் தர முடியாது. மீறி சூட்டிங் நடத்த வேண்டும் என்றால் நீங்களே செலவு செய்துகொள்ளுங்கள் என்று கதவை அடைத்து விட்டார்களாம். எனவே என்ன செய்வதென்று தெரியாமல் அருண் மாதேஸ்வரன் முழித்துக்கொண்டிருக்கிறாராம்
இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் உடன் தனுஷ் அடுத்த படத்திலும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தனுஷின் ஒன் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





