- Advertisement -
Homeபொழுதுபோக்குசூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான், தயாரிப்பாளர் சொன்ன...

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான், தயாரிப்பாளர் சொன்ன பகீர் தகவல் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இன்று மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். பல வெற்றிப் படங்களை தந்த அவர், சமீபகாலமாக சில மோசமான தோல்விகளையும் சந்தித்தார். எனினும் அவரது 50வது படம் மகாராஜா அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்து கம்பேக் படமாக அமைந்தது.

இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து விஜய் சேதுபதி வழங்கி வருகிறார். அத்துடன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அந்த படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார்.

- Advertisement -

துவக்கத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு பீட்ஸா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தில் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் வித்யாசமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருடன் பாபி சிம்ஹா, கருணாகரன், அசோக் செல்வன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்போது சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட்டு, விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. அர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொள்ளு சபா மனோகர்தானாம். பல படங்களில் இவர் காமெடியாக நடித்துள்ளார். குறிப்பாக சந்தானத்துடன் பல படங்களில் காமெடி செய்துள்ளார். லொள்ளு சபா மனோகர்தான், விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்க வேண்டும் என இயக்குனர் நலன்குமாரசாமி அடம் பிடித்தார். நான்தான் விஜய் சேதுபதி நடிக்க முடிவு செய்தேன் என, சமீபத்தில் தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு ரசிகர்கள், விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்