ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவரது தம்பி நடிகர் ஜெயம் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என்றும் அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தனி ஒருவன் வேலைக்காரன் உனக்கும் எனக்கும் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட பல படங்களை இயக்குனர் மோகன் ராஜா டைரக்ட் செய்திருக்கிறார். இப்போது கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் திரு டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்து மோகன்ராஜா நடிகராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மோகன்ராஜா நடிகர் கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படம் குடும்ப பின்னணியில் உருவாகும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்காக அவர் 3 ஆண்டுகள் ஸ்கிரிப்ட் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் மோகன்ராஜா இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே காஷ்மோரா படத்தில் நடிகர் கார்த்தியுடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.
அதனால் நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ராஜா விரும்புகிறார். ஒருவேளை கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க முடியாத பட்சத்தில் அடுத்ததாக நடிகை திரிஷாவை இந்த படத்தில் கதாநாயகியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி திரிஷா இணைந்து நடித்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனால் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா நடிக்க விரும்பி அவரிடமும் பேச திட்டமிட்டுள்ளனர். அதனால் இந்த படத்தை பொருத்தவரை நயன்தாரா இல்லேன்னா திரிஷா என்ற முடிவில் கதாநாயகியை கமிட் செய்ய இயக்குனர் மோகன்ராஜா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





