- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல சமையல் கலைஞர், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - மனைவி 6...

பிரபல சமையல் கலைஞர், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் – மனைவி 6 மாதம் கர்ப்பம் என்றும் பரவிய தகவல்!

- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள பிரபல திரைப்பட நடிகர்கள் நடிகைகள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் வி ஐ பி களின் இல்லங்களில் நடக்கும் குடும்ப விசேஷங்கள் என்றாலே அங்கு மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் தான் பிரபலமானது. அவரது வகை வகையான சமையல்தான் அங்கு விருந்தாக பரிமாறப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன் இல்ல விழாவில் கூட மாதம்பட்டி ரங்கராஜ் தான் கேட்டரிங் செய்திருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் கோயம்புத்தூரை சேர்ந்தவர். கேட்டரிங் தொழில் மூலம் பிரபலமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2019ம் ஆண்டில் வெளிவந்த மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பென்குயின் என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்த படங்களுக்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து பிரபலங்களின் இல்ல திருமணங்கள், சினிமா விழாக்கள் முக்கிய விசேஷங்கள் மற்றும் விழாக்களில் அவர் கேட்டரிங் செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரலானது. அந்த விருந்தில் கலந்துக்கொள்ளும் விஐபிகளுடன் பட்டு வேட்டி பட்டு சட்டையிலும் கோட் சூட் அணிந்தும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு ஹீரோ போல கம்பீரமாக வலம் வருவார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகவும் அவர் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போதும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்போதும் அந்த நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிஸ்டலா, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்கராஜ் என பதிவிட்டு அவருக்கு திருமண கோலத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பொட்டு வைக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இன்று காலை பேபி லோடிங் 2025, நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம், 6வது மாதம் எனவும் கிரிஸ்டலா பதிவிட்டுள்ளார் அதோடு அவரது ப்ரொபைல் படத்தையும் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் ஜோடி படமாக மாற்றியுள்ளார். கிரிஸ்டலா ஏற்கனவே திருமணம் ஆனவர். ஜோதிகா நடித்த பொன்மகள் படத்தை இயக்கிய பிரட்ரிக் என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜனும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தபோது அவருக்கு ஆடை வடிவமைப்பு நிபுணராக கிரிஸ்டலா இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் அவர்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் தங்களது முந்தைய ஜோடியை விட்டு பிரிந்து 6 மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுவிட்டு அதை தற்போது தான் அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்