- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஷில்பா ஷெட்டிக்கு இப்படி ஒரு ஆசையா? - கேரளாவில் நடந்த விழாவில் அவரே மேடையில்...

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இப்படி ஒரு ஆசையா? – கேரளாவில் நடந்த விழாவில் அவரே மேடையில் ஓபனா சொல்லிட்டாரே…?

- Advertisement -

கன்னடத்தில் உருவான படம் கேடி தி டெவில். இந்த படம் கன்னடத்தைக் தொடர்ந்து தமிழ் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் துருவ் சார்ஜா நாயகனாகவும் ரீமா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கேடி தி டெவில் படத்தில் பாலிவுட் பிரபல நட்சத்திரங்களான நடிகர் சஞ்சய்தத் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் பிரேம் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேடி தி டெவில் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

அப்போது பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி, மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்த போது நடிகர்கள் பிரபுதேவாவும் வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் குஷி படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட்டதை மறக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை; அதனால் தான் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கேடி தி டெவில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. கேரளாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாவது, நான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. இந்தியைத்தவிர தமிழ் தெலுங்கு கன்னட மொழிப் படங்களில் நிறைய நடித்துள்ளேன்.

- Advertisement -

மலையாளத்திலும் நடிக்க சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் பயம் காரணமாக நான் நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில் மலையாளத்தில் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மலையாளத்தில் நடிப்பேன்.

இந்திய சினிமாவின் மிக அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு என்ற மலையாள படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்று கேரளாவில் நடந்த அந்த விழாவில் நடிகை ஷில்பா ஷெட்டி பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்