நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத்குமார் இருவரும் சம காலத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். ரஜினி கமல் போலவே ஒரு கட்டத்தில் இவர்களையும் போட்டியாளர்களாக ரசிகர்கள் கருதிய நிலையில் இவர்களுக்குள் சினிமாவில் மறைமுக போட்டி உருவானது.
ஆனால் விஜய் அஜீத்குமார் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். நடிகர் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி, நாயகியாக அறிமுகமானதே நடிகர் விஜயுடன்தான். பாசில் இயக்கத்தில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜீத்குமார் விஜய் இடையே போட்டி நீடித்த நிலையில் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்து விட்டார். அஜீத்குமாரும் கார் ரேஸ் பைக் ரேஸ் என விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அதனால் மீண்டும் விஜய் அஜீத்குமார் படங்கள் திரைக்களத்தில் மோதுமா என்ற எதிர்பார்த்து அவர்களது ரசிகர்கள் மத்தியில் பொய்த்துப் போய் விட்டது. ஆனால் இப்போது ரசிகர்களின் அந்த கனவு நிறைவேறப் போகிறது. ஏனெனில் விஜய் அஜீத்குமார் நடித்த படங்கள் வருகிற 24ம் தேதி மோதுகின்றன.
இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம் அமர்க்களம். அஜீத்குமார் ஆக்சன் ஹீரோவாக மாறிய படம் இதுதான். ஷாலினி இதில் நாயகியாக நடித்திருந்தார். நாசர் ரகுவரன் அம்பிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. வருகிற 24ம் தேதி அஜீத்குமார் – ஷாலினி திருமண நாளில் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதே நாளில் நடிகர் விஜய் அசின் நடித்த சிவகாசி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. சிவகாசி அமர்க்களம் படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. மேலும் மாதவன் மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படமும் அதே நாளில் ரி ரிலீஸ் ஆகிறது. விஜய் படமும் அஜீத்குமார் படமும் ஒரே நாளில் ரி ரிலீஸ் செய்யப்படுவது அவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





