- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பை தணிக்கை துறைக்கு வெச்சுட்டாங்க ஆப்பு, இனி இந்தியில் டப்பிங் செய்ய லஞ்சம் தர...

மும்பை தணிக்கை துறைக்கு வெச்சுட்டாங்க ஆப்பு, இனி இந்தியில் டப்பிங் செய்ய லஞ்சம் தர வேண்டியதில்லை – மத்திய அரசு அதிரடி ஆக்சன்

- Advertisement -

சமீப காலமாக தமிழில் எடுக்கப்படும் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றன. தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இந்த படங்கள் டப் செய்யப்பட்டு, பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது. அதே போல் மற்ற மொழி படங்களும், தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் ஓடி, கணிசமான லாபத்தை தந்து வருகின்றன.

அந்த வகையில், தமிழ் சினிமா கதைகளுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால், தமிழில் வெற்றிக்கரமாக ஓடும் படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அங்கும் திரையிடப்பட்டு வருகின்றன. இப்படி பல படங்கள், தமிழில் இருந்து இந்திக்கு மாற்றம் செய்யப்படுகின்றன.

- Advertisement -

சமீபத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படம், தமிழில் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மார்க் ஆண்டனி படத்தை, இந்தியில் மொழிமாற்றம் செய்ய, மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலகத்தை நாடினார் நடிகர் விஷால்.

மார்க் ஆண்டனி படத்தை இந்தி வெர்சனுக்கு மாற்றிய நிலையில், மும்பையில் உள்ள சென்சார்போர்டு அலுவலகத்தில், இப்படி மொழிமாற்றம் செய்யவும், சென்சார் அனுமதி சான்றிதழ் வழங்கவும் மொத்தம் ரூ. 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, வீடியோ வெளியிட்டு விஷால் பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இதுகுறித்து, மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தரப்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தமிழ் படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்ய, மும்பை சென்சார் போர்டு லஞ்சம் வாங்கிய சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தணிக்கைத்துறை அலுவலகத்திலேயே, இந்தியில் டப்பிங் செய்யப்படும் தமிழ் படங்களுக்கு இங்கேயே தணிக்கை செய்து, அதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என, மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாளை 20ம் தேதி முதல், வரும் ஆறு மாதங்களுக்கு இதை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் இனி, தமிழ் படங்களுக்கு இந்தி டப்பிங் சான்றிதழ் பெற மும்பைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

சற்று முன்