தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. அவரின் கிளப்புல மப்புல ரேப் பாடல் தமிழ்நாடு முழுவதும் ஹிட் ஆனது. இதன் மூலம், சினிமாவிற்குள் நுழைந்த அவர் ஹிட் பாடல்களை கொடுத்து தன்னை ஒரு இசையமைப்பாளராக நிரூபித்து காட்டினார்.
முக்கியமாக அவரது இசையில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் தனித்துவமான இசை கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் ஹிப் ஹாப் ஆதி. இவரா இந்த அளவுக்கு இசையமைத்திருப்பது என ஆச்சரியப்படும் அளவுக்கு தனி ஒருவன் திரைப்படம் அமைந்தது.
தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்த அவருக்கு மீசைய முறுக்கு திரைப்படம் நடிகராக வாய்ப்பை கொடுத்தது. படத்தை அவரே இயக்கி நடித்தார். தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையே திரைக்கதையாக தொகுத்து அவர் இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொடுத்தார்.
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் ஆரம்பமானது முதல் முடிவு வரை கலகலப்பாகவும், சென்டிமென்ட் காட்சிகளையும் அவர் கொடுத்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதனால் மீசைய முறுக்கு திரைப்படம் ஹிப் ஹாப் ஆதியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பெரிய தோல்வியையும் இது அடையவில்லை. ஓரளவு 2க் கிட்ஸ்கள் மத்தியில் இந்த திரைப்படம் பேசப்பட்டதால், ஆதிக்கு என ஒரு சிறிய மார்க்கெட் திரையுலகில் கிடைத்தது.
இப்படியான சூழலில் தற்போது அவர் PT சார் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, இயக்குனர் பாக்கியராஜ், தேவதர்ஷினி உள்பட ஏராளமானோர் இந்த திரைப்படத்தின் நடித்துள்ளனர். பள்ளிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை கொடுத்து இந்த திரைப்படம் பேசுவது அதன் ட்ரைலரை பார்க்கும்போது தெரிகிறது. வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





