தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி இப்போது அரசியல் களத்தில் குதித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
விக்கிரவாண்டியிலும் அதைத் தொடர்ந்து மதுரையிலும் தனது கட்சியின் அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டிய நடிகர் விஜய் இப்போது மாவட்டம் வாரியாக சென்று மக்கள் சந்திப்பு பயண கூட்டங்களை நடத்தி வருகிறார். திருச்சி அரியலூர் நாகை திருவாரூர் ஆகிய பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்து முடித்திருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு மாநாடுகளிலும் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு விடுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் ரோடு முழுக்க திரண்டு வந்து வருகின்றனர். விஜய் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவருக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே மக்கள் செல்வாக்கும் ஆதரவும் அவருக்குதான் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படுகிறது.
ஆனால் விஜயை பார்க்க வருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. ஒரு நடிகர் என்கிற முறையில்தான் விஜய்க்கு கூட்டம் வருகிறது. அதனால் கூட்டம் அத்தனையும் ஓட்டாக மாறாது என்று திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி சார்ந்த நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். நடிகர் கமலும் கூட கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இது விஜய்க்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, வந்த கூட்டமும் அத்தனை கூட்டமும் அரசியல் தெரிந்த கூட்டம். சமூக அக்கறையுள்ள கூட்டம். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். அதை ஏத்துக்கொண்ட கூட்டம். அதனால் அது ஓட்டாக மாறுமா மாறாதா என்று நீங்களே சொல்லுங்க.
யாரையும் காசு கொடுத்தோ பிரியாணி கொடுத்தோ நாங்க கூட்டத்துக்கு கூப்பிடலே. மாநாடுக்கு உள்ளே நுழைய முடியாம எத்தனை கோடி பேர் வெளியே இருந்தாங்க? விஜய் அவர்கள் அரசியலுக்கு வரணும். நாங்க ஏது்துக்கிறோம். அவர் வந்தால் நல்லது பண்ணுவார் என்ற நம்பிக்கையாடு வந்த கூட்டம். அதனால் அந்த நம்பிக்கை நிச்சயமாக ஓட்டாக மாறக்கூடிய வாய்ப்பு 100 சதவீதம் இருக்குது என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





