- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கள் குழந்தைகளை நீங்கள் வளர்க்கப் போறீங்களா? நடிகர் சாந்தனு மனைவி கிகி ஆவேசம்!

எங்கள் குழந்தைகளை நீங்கள் வளர்க்கப் போறீங்களா? நடிகர் சாந்தனு மனைவி கிகி ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக வலம் வருபவர் கே பாக்யராஜ். கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் சாந்தனு. வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக கே பாக்யராஜூக்கு மகனாகவே நடித்திருந்தார். அதன்பிறகு சாந்தனு கதாநாயகனாக நடித்த படம் சக்கரக்கட்டி. இந்த படம் பிளாப் ஆனது.

தொடர்ந்து பிளஸ் 2 முருங்கைக்கா சிப்ஸ் ராவணக்கூட்டம் கசடற தபற அம்மாவின் கைபேசி வாய்மை வானம் கொட்டட்டும் ப்ளு ஸ்டார் என பல படங்களில் நடித்தார். ஆனால் நடிகர் சாந்தனுவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அடையாளம் இதுவரை கிடைக்கவில்லை. நடிகர் பாக்யராஜூக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார். இவர் பாரிஜாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை பெற முடியவில்லை.

- Advertisement -

நடிகர் சாந்தனு, சினிமா நடிகரான பிறகு பிரபல தொகுப்பாளினி கிகியை காதலித்து கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். 10 ஆண்டுகள் கடந்தும் இந்த தம்பதிக்கு இன்னும் குழந்தை இல்லை. சாந்தனுவின் மனைவி கிகி இரண்டு நடனப் பள்ளிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதுதவிர அவ்வப்போது டிவி சேனல்களில் தொகுப்பாளினியாகவும் தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கிகி தொடங்கியுள்ள யூடியூப் சேனல் பக்கத்தில் பலரும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏன் உங்களுக்கு குழந்தை இல்லை என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு இதுசார்ந்த கேள்விகளே அதிகமாக வருவதால் கோபமான தொகுப்பாளினி கிகி ஆவேசமாக பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிகி கூறியிருப்பதாவது, எல்லோரும் எங்களிடம் குழந்தை எப்போது பிறக்கும் என கேட்கிறார்கள். எங்களுடைய குழந்தைகளை நீங்களா கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள்? நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுடைய குழந்தைகளை நீங்கள் வளர்த்துக் கொடுக்கப் போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

மேலும் நாங்கள் இப்படி பேசுவதை பார்த்து நீங்கள் திமிராகவோ, ஆணவமாகவோ பேசுகிறோம் என்று நினைக்காதீங்க. எங்களுடைய வலி வேதனையைதான் நாங்கள் இப்படிச் சொல்கிறோம். இப்படி நொய் நொய் என்று இவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு மன அழுத்தம்தான் வருகிறது. கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும் என்று கிகி தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்