- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும்... பகீர் கிளப்பிய பிரேமம் பட இயக்குனர்...

விஜயகாந்த் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும்… பகீர் கிளப்பிய பிரேமம் பட இயக்குனர்…

- Advertisement -

நடிகரும் தேமுதிக தலைவர் ஆன விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், நுரையீரல் அழற்சி நோய் இருந்ததாகவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் கடின முயற்சியை மேற்கொண்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. விஜயகாந்தின் இறப்பால் தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

முதலில் விஜயகாந்த் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் 3 மணி நேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயம்பேடுக்கு வந்து அடைந்தது.

- Advertisement -

விஜயகாந்தின் உடலுக்கு தேமுதிக தொண்டர்கள், தமிழ் திரையுலகினர் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உயிரிழப்பு காரணமாக தேமுதிக குடி 15 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4:45 மணிக்கு, தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், தமிழக மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் திரையுலக சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விஜயகாந்தின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பதாவது, இது உதயநிதி ஸ்டாலினுக்கானது. நான் கேரளாவில் இருந்து வந்து, ரெட் ஜெயன்ட் அலுவலகத்திற்குச் சென்றேன். அன்று உங்களிடம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினேன். அதேபோல் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உங்களிடம் தெரிவித்தேன். இப்போது நீங்கள் விஜயகாந்தை கொன்றவர்கள் குறித்தும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஏற்கனவே அவர்கள் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனையும், ஸ்டாலின் சாரையும் கொலை செய்ய பார்த்தார்கள். இப்போது நீங்கள் இப்படியே விட்டு விட்டால், அடுத்ததாக நீங்களும் ஸ்டாலின் சாரம்தான் டார்கெட் ஆக இருப்பீர்கள். கொலையாளிகளையும் அவர்களது பின்னணிகளையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயம்தான் என்று பதிவிட்டுள்ளார். இயக்குனரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்