தமிழ் சினிமாவில், முக்கியமான உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடிப்பது என்பது, எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சில நேரங்களில் வளரும் நிலையில் உள்ள நடிகர், நடிகையர் பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன ரோல்களில் நடித்தால் கூட போதும் என ஆசைப்படுவர். காரணம், பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தால் எளிதில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரீச் பண்ண முடியும். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கும்.
அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அது அந்த நடிகர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும். அதே வேளையில், பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் நடிக்கும் போது, படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப, அவர்களது சம்பளமும் கணிசமாக உயரும். அதனால், பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் இயக்குநர்களின் தொடர்ந்து பலரும் வாய்ப்பு கேட்பது வழக்கம்தான்.
இந்த நிலையில், அஜீத்குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் ஒரு பிரபல நடிகை. அவருக்கு பதிலாக இப்போது வேறொரு நடிகை அதே கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கும் நடிக்க மறுத்த அந்த நடிகை ஏற்கனவே அஜீத்குமார் நடித்த வலிமை படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர்.
அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைனானில் நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஹூமா குரேஷி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது திடீரென அவருக்கு பதிலாக அதே கேரக்டரில் ரெஜினா கசன்ட்ரா நடிக்க உள்ளார்.
நடிகை ஷூமா குரேஷி ஏற்கனவே, காலா படத்தில் ரஜினிக்கு முன்னாள் காதலியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடித்தாலும், சில நட்சத்திரங்கள் எளிதில் ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுவர். அதில் ஹூமோ குரேஷி ஒருவர். இவர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக, அஜீத்குமாருடன் பணி செய்பவராக நடித்திருந்தார். கம்பீரமாக சண்டை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இந்நிலையில், மீண்டும் அஜீத்குமார் படத்தில் ஹூமா குரேஷி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் விலக்கப்பட்டு, அந்த கேரக்டரில் ரெஜினா கசன்டரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, அதீத கவர்ச்சி காட்டி நடிக்க பாலிவுட் ஸ்டார் நடிகையான ஹூமா குரேஷி மறுத்திருப்பார், ஒருவேளை சம்பளம் உயர்த்தி கேட்டதால், அவர் விலக்கப்பட்டு இருக்கலாம் என பல காரணங்கள் கோலிவுட்டில் உலா வருகின்றன.





