- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அல்லு அர்ஜூன் எடுத்த அதிரடி முடிவு, எது நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என எச்சரித்த...

நடிகர் அல்லு அர்ஜூன் எடுத்த அதிரடி முடிவு, எது நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என எச்சரித்த ஐதராபாத் போலீசார்- நம்மூர் போலீஸ் இப்படி இல்லையே?

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். முக்கிய கேரக்டர்களில் சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தார். ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாட்டுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் பலத்த வெற்றிக்கு பிறகு புஷ்பா 2ம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி, இதே நாளில் உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தற்போதைய நிலவரப்படி 1800 கோடிக்கு மேல் வசூலில் புஷ்பா 2 கொடி கட்டிப் பறக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 பிரிமியர் ஷோ நடந்த போது, நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் பலத்த காயமடைந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜூன், அவரது தந்தை அல்லு அரவிந்த், படத்தின் இயக்குனர் சுகுமாறன், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு சார்பில் 2 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஒருநாள் சிறையில் இருந்த நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு இப்போது நடந்து வருகிறது. இதில் தியேட்டரில் நெரிசலில் சிக்கி காயமடைந்த 9 வயது சிறுவன், தற்போது குணமடைந்து வருகிறான். முதலில் கோமா நிலையில் இருந்த சிறுவன், தீவிர மருத்துவ சிகிச்சையால் தேறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திட்டமிட்டுள்ளார். சிறுவனையும் அவரது குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், ஆந்திராவில் உள்ள ராம் கோபால் பேட்டை போலீசார், அல்லு அர்ஜூனுக்கு உடனடியாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்கச் செல்லக் கூடாது. எங்களது தடையை மீறிச் சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அதில் எச்சரித்துள்ளனர். அதனால் சிறுவனை பார்க்கச் செல்ல திட்டமிட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜூன் அந்த முடிவை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்