- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் நடிக்கும் படத்தை இயக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ், இந்த வாய்ப்பை தானாக முன்வந்து...

கமல் நடிக்கும் படத்தை இயக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ், இந்த வாய்ப்பை தானாக முன்வந்து கொடுத்த நடிகர் கமல்ஹாசன் – பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்துக்கு பிறகு அவர் படங்கள் வேற லெவலில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2, இந்தியன் 3, தக்லைப் என அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக கமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, ஒரு அட்டகாசமான வீடியோவுடன் கடந்த வாரத்தில் வெளியானது. அதுவும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் டைரக்‌ஷனில் இந்த படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள்தான் கமலை ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்க உள்ளனர்.

- Advertisement -

இத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கமல் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிற நிலையில், நடிகர் கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை அன்பறிவ் மாஸ்டர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இப்போது வெளிவந்துள்ளது.

அதாவது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் கமல் நடித்து வருகிறார். அந்த படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் பணிசெய்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களது ஸ்மார்ட்டான ஹார்ட் ஒர்க் பார்த்து கமல் மிகவும் வியந்து போயிருக்கிறார். அவர்களது திறமையை கண்டு ஆச்சரியப்பட்டும் இருக்கிறார். 25 நாட்களாக அவர்களது டெக்னிஷியன் ஒர்க் பார்த்தும் கமல் மிரண்டு போயிருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து யாருடைய போன் நெம்பரையும் கேட்டு வாங்காத கமல், அன்பறிவ் மாஸ்டர்களின் போன் எண்ணை கேட்டு வாங்கி, அவரே போனில் அழைத்து பேசியிருக்கிறார். நேரில் வந்து சந்தித்த அவர்களிடம் என்னை வைத்து படம் பண்ணுகிறீர்களா, அதற்கான கதை உங்களிடம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்.

மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவர்கள், கதை இருக்கு சார், என்று கமலுக்கான ஒரு கதையை சொல்லியவுடன் உடனே கமல் ஓகேவும் சொல்லி விட்டார். அதன்பிறகுதான் அந்த வீடியோ வெளியாகி உள்ளது. அப்போது கமல் சொன்ன மற்றொரு முக்கிய தகவல், என்னுடைய பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் விக்ரம் தர்மா. அவரை டைரக்டராக்கி பார்க்க ஆசைப்பட்டேன். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அந்த ஒரு நினைவாக, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக உங்களுக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறேன், என்று மனம் திறந்து நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

- Advertisement -

சற்று முன்