- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்துல வெறும் 10 நிமிஷம் தான்... கட்டாயப்படுத்தி இத செஞ்சாரு... என்ன மனுஷன் சார் அவர்......

படத்துல வெறும் 10 நிமிஷம் தான்… கட்டாயப்படுத்தி இத செஞ்சாரு… என்ன மனுஷன் சார் அவர்… ஜெயிலர் குறித்து சிவராஜ்குமார் பேச்சு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் ரஜினிகாந்த், சமீப காலமாக ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கோச்சடையான், லிங்கா, தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் அவருக்கு கடும் தோல்வியை கொடுத்தன. இதனால் கதை கேட்பதில் கவனமுடன் செயல்பட்டு வரும் அவர், நெல்சனை தனது இயக்குனராக தேர்வு செய்தார்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதுபோக தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ என ஏராளமானோர் நடித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இருந்தும் பெரிய பெரிய நட்சத்திரங்களை களம் இறக்கினார் நெல்சன். மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கிஜராஃப் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, ஜெயிலரில் இருந்து வெளியிடப்பட்ட பாட்டுகள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. முக்கியமாக தமன்னா ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய கா வாலையா பாடல், இளசுகளை கட்டிப்போட்டது. இதுபோக டைகர் கா ஹுக்கும் பாடலும் பட்டித் தொட்டி எங்கும் கிட் அடித்தது. அதே சமயம் பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வரிகள் காரசாரமாக இருந்ததால், சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

ஜெயிலர் படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ள நிலையில், படம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுவதாக அறிவிக்கப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்களை நெல்சன் கலந்திருப்பதால், இந்த திரைப்படம் ஓடும் நேரம், தகுந்தது தான் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் சிவராஜ்குமார், பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அவர் கூறியதாவது, நான் படத்தில் 10-11 நிமிடங்கள் வருகிறேன். அது எனக்கு சொர்க்கமாக இருந்தது.உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் ரஜினி சாரின் சுறுசுறுப்பு அவர் செய்யும் பணியில் அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஒரு எளிய காட்சியில் கூட நெல்சனின் மேக்கிங் பிரமாண்டமாக இருந்தது. சிறிய கதாபாத்திரங்களுக்கான நோக்கமும் முக்கியத்துவமும் அழகாக இருந்தது. நான் கதையை கேட்க கூட விரும்பவில்லை. நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். ஆனால் நெல்சன் கதையை என்னிடம் கட்டாயப்படுத்தி கதையை விவரித்தார் என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்