- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடைக்கு பூசணிக்காய் சுத்தி போட்ட படக்குழு... அப்புறம் என்ன தனுஷ் ரசிகர்களே ரிலீஸ் மொமெண்ட்க்கு...

இட்லி கடைக்கு பூசணிக்காய் சுத்தி போட்ட படக்குழு… அப்புறம் என்ன தனுஷ் ரசிகர்களே ரிலீஸ் மொமெண்ட்க்கு தயாரா…

- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது அவரின் ஐம்பதாவது திரைப்படமாக எடுக்கப்பட்டது. படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஏற்கனவே இயக்குனர் அந்தஸ்தில் தனுஷ் எடுத்த பவர் பாண்டி திரைப்படம் பலரையும் கவர்ந்தது.

அதில் ஒரு புதிய கோணத்தில் காதலை சொல்லி இருப்பார் இயக்குனர் தனுஷ். இதன் காரணமாகவே, பலரும் ராயன் திரைப்படத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால் அதனை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார் தனுஷ். குறிப்பாக அவர் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டார் என்றே கூறலாம். இருப்பினும் இது படத்தின் வசூலை பாதிக்காமல் இருந்ததுதான் இங்கு ஆச்சரியம்.

- Advertisement -

இதன் பிறகு தனது சகோதரி மகனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இது எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இப்படியான சூழலில் தற்போது இயக்குனராக தனது நான்காவது திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.

இட்லி கடை என இதற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட்ஜன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. தனது சொந்த மாவட்டமான தேனியில்தான் இதன் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி இருந்தார் தனுஷ்.

- Advertisement -

பலருக்கும் இட்லி கடை மீதான ஆர்வம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள்தான். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டியில் வந்திருந்த ஷாலினி பாண்டே இதில் முக்கிய கதாபாத்திரம் வகிக்கிறார். அருண் விஜய் படத்தில் வில்லனாக நடிப்பது பலருக்கு கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதில் அவர் குத்துச்சண்டை வீரராக வருகிறார். இதுபோக ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள்.

படத்தின் எஞ்சிய சூட்டிங் பணிகள் எடுக்கப்படாமல் இருந்த சூழலில் தற்போது அதற்கான வேலைகளை தனுஷ் முடித்திருக்கிறார். இதற்கான கடைசி காட்சிகள் பாங்காங்கில் படமாக்கப்பட்டிருக்கின்றன. தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி இட்லி கடை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்