- Advertisement -
Homeபொழுதுபோக்குசுத்தமான அரசியல் நடத்தணும்னா அவர்கிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கணும், அதிரடியாக பேசிய இசைஞானி இளையராஜா!

சுத்தமான அரசியல் நடத்தணும்னா அவர்கிட்ட தான் ஆசிர்வாதம் வாங்கணும், அதிரடியாக பேசிய இசைஞானி இளையராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தனர். 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை தந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் தன்னுடைய இசையால் ரசிகர்களின் மனங்களை வென்றவர்.

இளையராஜாவை பொருத்த வரை இசையில் மட்டுமின்றி ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர். நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பது வழக்கம். அதே போல் ரஜினியை, இளையராஜாவும் சாமி என்றுதான் அழைக்கிறார். கடவுள் பக்தியில் திளைத்தவர் இசைஞானி இளையராஜா என்பதால் அவரது பக்தி பாடல்களில் பரசவம் பொங்கி வழியும். ஜனனி ஜனனி பாடல் இப்போதும் நெஞ்சம் உருகச் செய்கிறது.

- Advertisement -

இசைஞானி இளையராஜா குறித்து பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் இசையில் அவர் ஒரு நிகரில்லாத சக்ரவர்த்தியாக இருந்து வருகிறார். அதே போல் அரசியலில் ஒரு மாபெரும் கர்மவீரராக வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். அவரை பற்றி சிலர் தவறான கருத்துகளை கூறி வரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் காமராஜர் குறித்து மாணவ மாணவியர் மத்தியில் இளையராஜா பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற இசைஞானி இளையராஜாவிடம், காமராஜரை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா? அவரை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு மாணவி கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த இளையராஜா கூறியதாவது, நான் காமராஜரை சந்தித்து இருக்கிறேன். என்னை அவருக்கு தெரியாது. அவர் முதல்வரான பிறகு முதன்முறையாக எங்கள் கிராமத்துக்கு காமராஜர் வந்திருக்கிறார்.

- Advertisement -

பண்ணைபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் வருகிறார். ஒரே ஒரு மைக் இருக்குது. போலீஸ் எல்லாம் நிற்கிறாங்க. அப்போ அவர் வந்து கொஞ்ச நேரம் மைக்கில் பேசறாங்க. போலீஸ் ஐந்தடி பத்தடி தூரத்துல நிற்குது. போலீஸ் எல்லாம் இப்போ மாதிரி ஆர்ப்பாட்டம் எல்லாம் அப்போ கிடையாது. ரெண்டே ரெண்டு போலீஸ் வந்தாங்க. ஐஜி வந்தார் கூட. மொத்தம் 3 பேர்தான் இருந்தாங்க. காமராஜர் மாதிரி யாராவது உலகத்துல இருக்க முடியுமா?

அரசியல் வந்து இனிமேல் சுத்தமா நடத்தணும் நல்லபடியா நடத்தணும் மக்களுக்காக நடத்தணும் என்று யாராவது நினைத்தால் காமராஜர் புகைப்படத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அவரோட ஆசிவாதத்தை வாங்கிட்டு போனாலே ரொம்ப நல்லது. ஏனென்றால் அந்தளவுக்கு அவர் சுத்தமான அரசியல் நடத்தியவர். அரசை நடத்தியதும் சரி, மக்களுக்காக திட்டம் போட்டு மக்களுக்கே அதை கொண்டு போய் சேர்த்தவரும் அவர்தான் என்று அந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்