- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மீது அப்படி என்ன கோபம்? அமீரை தொடர்ந்து அந்த இயக்குனரும் இப்படி பேசியிருக்காரே?...

நடிகர் விஜய் மீது அப்படி என்ன கோபம்? அமீரை தொடர்ந்து அந்த இயக்குனரும் இப்படி பேசியிருக்காரே? – அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். ஆரம்பத்தில் அவரை பாராட்டிய இயக்குனர்கள் சீமான் அமீர் போன்றவர்கள் இப்போது கடுமையாக விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர். சினிமா துறையில் இருந்து நடிகர் விஜய்க்கு இதுவரை பெரிய அளவில் எந்த ஆதரவுமே இல்லாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் பேசிய இயக்குனர் அமீர், மதுரையில் நடந்தது மாநாடா அல்லது ரசிகர்கள் சந்திப்பு கூட்டமா? தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாமல் நடத்தியது மாநாடு போலவே தெரியவில்லை என்று கூறியிருந்தார். அங்காடித் தெரு வெயில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலனும் நடிகர் விஜய் நடத்திய மதுரை தவெக மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் நடிக்கும் புதிய படம் பூக்கி. இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். சென்னையில் பூக்கி பட விழாவில் இயக்குனர் வசந்தபாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, சமீபத்தில் ஒரு மாநாட்டை டிவியில் பார்த்தேன். நம் இளைஞர்கள் இன்னும் அரசியல்படுத்தப்படாமல் இருக்கிறார்களோ என தோன்றுகிறது.

அதற்கு காரணம், காலை முதல் அந்த மாநாட்டில் வெயிலில் கருகிப் போகிறார்கள். மேடையில் இருந்து தூக்கி வீசப்படுகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை நாம் சரியாக வழிநடத்தவில்லை. அவர்களை கவர தவற விட்டோம். அவர்களின் குரலை பேச தவற விட்டோம். குறிப்பாக சினிமாவில் அந்த இளைஞர்கள் குரல், அவங்க மனசு பதிவாகவில்லையோ என்று தோன்றுகிறது.

அவர்களுக்கு விருப்பமான படங்கள் வராமல் பான் இந்தியா படங்களாக நாம் எடுக்கிறோம் என்பதே அந்த கூட்டத்தை பார்த்தபோது எனக்குத் தோன்றியது. அவர்கள் குரல் பேசப்பட வேண்டும். அவர்கள் உலகம் என்ன என்பதை நாம் காண்பிக்கவில்லை. மலையாளம் கன்னட சினிமாவில் இளைஞர்களின் மனசு, உலகம், அவர்கள் மொழி அவர்கள் காதலை பதிவு செய்கிறார்கள்.

தமிழில் அந்த நிலை இல்லை. இப்போது பூக்கி காதல் படமாக வருவது மகிழ்ச்சி என்று இயக்குனர் வசந்தபாலன் பேசியிருக்கிறார். இதுவரை அரசியல் பேசாத இயக்குனர் வசந்தபாலன் திடீரென விஜய் பெயரை குறிப்பிடாமல் அதே நேரத்தில் அந்த மாநாடு குறித்து விமர்சித்திருப்பது அதிக கவனம் பெற்றிருக்கிறது. தேவையின்றி இவர் எதுக்கு தவெக மாநாடு பற்றி விமர்சிக்கிறார் என தளபதி ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

சற்று முன்