- Advertisement -
Homeபொழுதுபோக்குவின்னர் திரைப்படம் எடுக்கும்போது வடிவேலுவுக்கு அந்த பிரச்சனை இருந்தது உண்மைதான்... என்னங்க இயக்குனர் சுந்தர் சி...

வின்னர் திரைப்படம் எடுக்கும்போது வடிவேலுவுக்கு அந்த பிரச்சனை இருந்தது உண்மைதான்… என்னங்க இயக்குனர் சுந்தர் சி இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு கலகலப்பான திரைப்படங்களை கொடுத்து உற்சாகப்படுத்தும் இயக்குனர்களில் முதன்மையானவர் சுந்தர் சி. அவரது திரைப்படம் என்றாலே இங்கு ஜாலியாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. கமர்சியலுடன் விறுவிறுப்பாக கதை அமைத்து, அதில் நகைச்சுவையையும் தூவி விட்டு சுந்தர் சி அட்டகாசம் செய்வார்.

நடுவே ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த அவர், அந்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சுந்தர் சி அவுட்டேட்டட் ஆகிவிட்டதாக பலரும் கூறி வந்த சூழலில், கலகலப்பு திரைப்படத்தை எடுத்து தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்தார் இயக்குனர். நகைச்சுவை விருந்தாக அமைந்த அந்த திரைப்படம் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அரண்மனை திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் சுந்தர் சி. அதன் முதல் இரண்டு பாகங்கள் திரையரங்குகளில் சக்கை போடு போட்டன. ஹாரர் திரைப்படத்தில் நகைச்சுவையை மட்டுமல்லாமல் கவர்ச்சியையும் புகுத்த முடியும் என்பதை காட்டி அதை வெற்றி படமாக சுந்தர் சி மாற்றினார்.

அண்மையில் அவரது இயக்கத்தில் வெளிவந்த மதகஜராஜா திரைப்படமும் வெற்றி மாலை சூடியது. இத்தனைக்கும் இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் முடங்கி கிடந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் வெற்றி பெற்றது தான் இங்கு ஆச்சரியம். அது மட்டுமல்லாமல் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து சுந்தர் சி, அடுத்ததாக வடிவேல் உடன் இணைந்து கேங்கர்ஸ் எனும் படத்தை எடுத்திருக்கிறார். இது வரும் 24ம் தேதி வெளியாகிறது.

படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் வின்னர் திரைப்படத்தில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தார். அதில் கைப்புள்ள என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலு மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார். படம் முழுக்க அவர் ஒரு காலில் அடிபட்டபடியே சாய்ந்து நடப்பார். அது பொய்யல்ல உண்மைதான் என்று கூறியிருக்கிறார் சுந்தர்சி. காயத்துடன் தான் வடிவேலு அந்த திரைப்படத்தின் நடித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்