- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு, எப்போ எங்கே துவங்கறாங்க தெரியுமா?...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு, எப்போ எங்கே துவங்கறாங்க தெரியுமா? – போடு வெடிய, லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 170வது படம் வேட்டையன். இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பது உறுதியாகி விட்டது. அதே போல் நடிகைகள் அபிராமி, சுகன்யா, ஷோபனா போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தி நடிகர் ஷாருக்கான் அல்லது ரன்வீர் சிங் இந்த படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருவரில் ஒருவர் நடிப்பது உறுதி என்கின்றனர்.

- Advertisement -

ஏறக்குறைய 38 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் நடிக்கிறார். கடைசியாக அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். ரஜினி மீது சத்யராஜூக்கு ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக, ரஜினி படங்களில் நடிப்பதை சத்யராஜ் தவிர்த்து வந்தார். சிவாஜி படத்தில், சுமன் நடித்த வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குனர் ஷங்கர் அழைத்த போது மறுத்துவிட்டார். ஆனால், இப்போது ஒத்துக்கொள்ள காரணம், கூலி படத்தில் ரஜினியின் நண்பர் கேரக்டரில்தான் சத்யராஜ் நடிக்கிறார்.

கைதி, விக்ரம் போன்ற மாஸ் படங்களை தந்தவர் லோகேஷ் கனகராஜ். லியோ படம் பெரிய ஏமாற்றத்தை தந்தாலும், கூலி படத்தில் ரஜினிகாந்தை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்வார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அடுத்து வர உள்ள வேட்டையன் படத்தை விட, கூலி படம் குறித்த ஆர்வம்தான் ரஜினி ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற 5ம் தேதி, வெள்ளிக்கிழமை கூலி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் துவங்குகிறது. தொடர்ந்து 35 நாட்கள் அங்கு ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் மற்றும் இதர நட்சத்திரங்கள் கலந்துக் கொள்கின்றனர். அதன்பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்கிறார்.

அதே நேரத்தில் வருகிற 8ம் தேதி முதல் சென்னையில், வேட்டையன் படத்தின் டப்பிங் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 35 நாட்கள் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், இடையில் ஓரிரு தினங்கள் இடைவெளி கிடைக்கும். அந்த நாட்களில் சென்னைக்கு வந்து வேட்டையன் படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் பேசி விடுவார். 8ம் தேதி துவங்கும் வேட்டையன் படம் டப்பிங் பணியில், மற்ற நடிகர், நடிகைகள் பேசும் டப்பிங் பணிகள் அதுவரை நடக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்