ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு திரைப்படங்களின் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்துட்டார். இதில் ஒரு திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கினார்.. லால் சலாம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் மொய்தீன் கான் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் ரஜினிகாந்த். ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே எஸ் ரவிக்குமார், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதனை இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடனும், பிறகு மீண்டும் நெல்சன் உடனும் ரஜினி இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி படு பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு வெற்றிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தார். அதிலும் 80 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் ரஜினி பார்க்காத வெற்றியின் உச்சங்களை இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது திரைப்பயணம் ஏறுமுகத்தில் இருந்தது. இதன் காரணமாக ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார் ரஜினிகாந்த்.
இயக்குனர் பி வாசு உடன் அவர் மன்னன் சந்திரமுகி மற்றும் குசேலன் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் மன்னன் சந்திரமுகி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படம் பி வாசுவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை எடுத்து உடனடியாக ரஜினியுடன் இணைந்து மன்னன் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட இந்த படத்தின் சாயல்தான் படையப்பா என்றே கூறலாம்.
மன்னன் திரைப்படத்தில், இளையராஜா இசையில் உருவான அம்மா என்றழைக்காத பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் தாய் பாடல் என்றாலே இதுதான் நினைவுக்கு வரும். ஆனால் இந்தப் பாடலில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாக இளையராஜா கூறியிருக்கிறார். ஆக்சன் ஹீரோவுக்கான பாடல் இல்லை என்று அவர் கூறி நடிக்காமல் இருந்தாராம். பிறகு இளையராஜா கூடிய பிறகு தான் அந்தப் பாடலில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்ததும், என்ன ரஜினிகாந்த் இப்படி செயல்பட்டு இருக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.





