- Advertisement -
Homeபொழுதுபோக்குசுவருக்கு பின்னால் மறைவில் சிவகார்த்திகேயன் செய்த அந்த விஷயம்… பார்த்து பதறிப் போன பிரபல இயக்குனர்...

சுவருக்கு பின்னால் மறைவில் சிவகார்த்திகேயன் செய்த அந்த விஷயம்… பார்த்து பதறிப் போன பிரபல இயக்குனர் – என்ன ப்ரோ இப்படி எல்லாம் நடந்துச்சா?

- Advertisement -

தமிழ் சினிமா இயக்குனர்களில் நெல்சன் ரசிகர்களின் அதிக கவனமும், வரவேற்பும் பெற்ற ஒரு இயக்குனர். கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக நெல்சன், முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தார். அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும் பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக இயக்குனர் நெல்சனுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.

- Advertisement -

ஜெயிலர் படத்தில் அபார வெற்றியை தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளது. ரஜினி முதன்முறையாக தனது நடிப்பில் வெளியான படத்தின் 2ம் பாகத்தில் ஜெயிலர் 2 படத்தில்தான் நடிக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்கிரிப் ரைட்டிங் பணியை முடித்துவிட்டதாக ஏற்கனவே நெல்சன் தகவல் கூறிவிட்டார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது சிவகார்த்திகேயன் குறித்து இயக்குனர் நெல்சன் கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்தே சிவா மிகவும் பாவமாக, அப்பாவியாக இருப்பார். யார் எது சொன்னாலும் சரிண்ணே என்றுதான் சொல்வார். இப்படி பாவமாக தங்களை காட்டிக் கொள்ளும் சிலர், விவரமான ஆட்களாக தான் இருப்பார்கள். சிவாவும் கையை கட்டியபடி பணிவாக இருப்பதால், நம்மை வெளியே திட்டுவானோ என்று எனக்கு தோன்றும்.

- Advertisement -

அதனால் என்னிடம் மிகவும் பவ்யமாக நடந்துக்கொள்பவர்களிடம் நான் ஜாக்கிரதையாக இருப்பேன். நம்மிடம் அண்ணா அண்ணா என்று பம்மிவிட்டு, மற்றவர்களிடம் நம்மை பற்றி கலாய்த்து பேசுவார்கள். மரியாதை இன்றி அவன், இவன் என்று குறிப்பிடுவார்கள். அதனால் அண்ணே அண்ணே என்று பேசும் கேரக்டர் என்றாலே எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். உஷாராக இருப்பேன்.

ஒருநாள் நான் சுவருக்கு முன்புறம் நின்று யாரிடமோ பேசிக்கொண்டு இருக்கிறேன். அப்போது, சுவருக்கு பின்னால் யாரோ மறைவில் நின்று சத்தமாக பேசி சிரித்துக்கொண்டு இருக்கிறார். ஒருவரை தரை ரேட்டுக்கு கலாய்த்து, கேவலமாக அங்கே நின்று பேசிக்கொண்டிருந்தது சிவாதான். நான் அப்படியே அதிர்ந்து போய்விட்டேன். தம்பி நீங்க இவ்வளவு பேசுவீங்களா என்று கேட்டேன். அப்போ, அண்ணே என்றார். அய்யோ நீ ஆள விடுப்பா என்று ஓடிவந்து விட்டேன், என்று கூறியிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

- Advertisement -

சற்று முன்