- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா பயோபிக் வருமா, வராதா? டைரக்டருக்கு திடீர் கண்டிஷன் போட்ட இசைஞானி, பிடிவாதம் காட்டும்...

இளையராஜா பயோபிக் வருமா, வராதா? டைரக்டருக்கு திடீர் கண்டிஷன் போட்ட இசைஞானி, பிடிவாதம் காட்டும் நடிகர் தனுஷ் – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்தார். இதுவரை பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து, ராஜா ராஜாதான் என்ற புகழோடு வாழ்ந்து வருகிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை கதையை 2 பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டு, அவரது பண்ணைபுரத்து இளமை கால வாழ்க்கையை ஒரு பாகமாகவும், சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து வெற்றி பெற்ற கதையை ஒரு பாகமாகவும் இயக்குவது என திட்டமிடப்பட்டது. படத்தின் நாயகனாக தனுஷ் இளையராஜா கேரக்டரில் நடிக்க முடிவானது.

- Advertisement -

கடந்த 6 மாதங்களுக்கு முன், கமல்ஹாசன் முன்னிலையில் இளையராஜா படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியில் மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என இரண்டு இயக்குனர்களை தனுஷ் சிபாரிசு செய்தார். இதில் அருண் மாதேஸ்வரனை தன் படத்தை இயக்க இளையராஜா தேர்வு செய்தார்.

நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதும், தானே சில படங்களை இயக்குவதும் என பிஸியாக இருந்து வருகிறார். அதனால் இளையராஜா படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் துவங்கும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

- Advertisement -

இதற்கிடையே இளையராஜா படத்தை மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சரிவர திருப்தியளிக்காத நிலையில், அந்த நிறுவனம் இளையராஜா படத்தை துவக்கவில்லை. அதனாலும் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் நீடிக்கிறது.

எனினும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கேரக்டரில் நடிக்க தனுஷ் பிடிவாதமாக இருந்து வருகிறார். வேறு தயாரிப்பு நிறுவனத்தை அவர் தேடி பேசி வருகிறார். இந்த சூழலில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனை அழைத்த இளையராஜா, ஒரு ஆண்டு முழுவதும் நீ என்னுடன் பயணிக்க வேண்டும். அவ்வப்போது எனக்கு வரும் கடந்த கால சம்பவங்களை, நினைவுகளை சொல்ல சொல்ல நீ எழுதிக்கொண்டு அதை ஸ்கிரீன் பிளே செய்துவிடு என்று உத்தரவிட்டுள்ளார். அதனாலும் இந்த படம் துவங்க தாமதம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்