தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் வினோதினி வைத்தியநாதன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த அவர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் நடிகை வினோதினி வைத்யநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் கரூர் சம்பவம் குறித்தும் சமூக குறைபாடுகள் குறித்தும் ஒரு கோபமான பதிவை செய்திருக்கிறார்.
அந்த பதிவில் நடிகை வினோதினி வைத்யநாதன் கூறியிருப்பதாவது, சினிமா சினிமா எங்கும் சினிமா எதிலும் சினிமா. இனி யாராவது எனக்கு முன்னால சினிமாக்காரங்க கிட்ட செல்பி எடுக்கிறேன் அதை எடுக்கிறேன் என்று வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன். குழந்தை இல்லாம இன்னைக்கு எத்தனை பேரு ஐவிஎஃப் சென்டர்ல போய் கஷ்டப்படுறாங்க. உங்க குழந்தையை பெரிய கூட்டத்துக்கு கூட்டிட்டு போறதும் நடிகனுங்க உங்க குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று அலையறதும் கூட்ட நெரிசல் இல்லேனாலும் ஏதாவது வைரஸ் பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கா இல்லையா?
உங்க குழந்தைக்கு உங்க முன்னோர்கள் பேரோ உங்க குலசாமி பேரோ வையுங்க. இது என்ன நடிகன் உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கணுங்குற வெறி? படிப்பு மட்டும் இருந்தா போதுமா? சுயமரியாதை இல்ல, பகுத்தறிவு இல்ல, இதுல ஜென் ஸி ஜென் ஆல்பாண்டுன்னு உருட்டு. இதை சொன்னா எங்களை பூமர்ன்னு நக்கல் பண்ண வேண்டியது.
சினிமாவுல நடிக்க நாங்க காசு வாங்குறோம். அத பாக்க நீங்க காசு செலவழிக்கிறீங்க. இந்த வித்தியாசம் கூட புரியலையா. எப்டிஎப்எஸ் போக வேண்டியது, பால் அபிஷேகம் செய்ய வேண்டியது. ஒரு நாள் காலையில நேரத்துக்கு எழுந்து உங்க அம்மாவுக்கு அக்காவுக்கும் ஒரு வாய் காபி போட்டு கொடுத்து இருக்கீங்களா?
வடக்கன் வந்து நம்ம வேலை எல்லாம் புடுங்குறான்னா எப்படி வராமல் இருப்பான்? அவன் குடும்பம் குட்டின்னு காசு சேர்த்து ஊருக்கு அனுப்பி அங்கேயும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்காமல் அண்ணன் தம்பின்னு எப்படியோ அந்த நிலத்தை பாதுகாத்துக் கொள்கிறான். சொந்த அறிவோ திறமையோ உழைத்து ஜெயிக்கணும் என்கிற முனைப்பு இன்னைக்கு இருக்கிற தலைமுறைகிட்ட சுத்தமா இல்ல.
மொத்தமா சினிமாவால் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம். பொறந்ததிலிருந்து செல்போனோட கக்கூஸ் போற கூட்டம். இதுகளை நினைச்சா இதுங்க கிட்ட தான் நம்ம தமிழ்நாட்டோட தலையெழுத்து இருக்குதுன்னு நினைக்கும் போது அடுத்த 20, 30 வருஷத்தை நினைத்தால் பயமா இருக்கு என்று வினோதினி வைத்யநாதன் அந்த பதிவில் கோபமாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





