- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத்தோட பாட்டு ஹிட் ஆகலாம் ஆனால் டாப் மியூசிக் டைரக்டர் அவர் இல்லை... இவர் தான்...

அனிருத்தோட பாட்டு ஹிட் ஆகலாம் ஆனால் டாப் மியூசிக் டைரக்டர் அவர் இல்லை… இவர் தான் இன்னைக்கும் டாப் – ஜேம்ஸ் வசந்தன் ஓபன் டாக்

- Advertisement -

3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதேபோல் முதல் படத்திலேயே சென்சேஷனல் ஹிட் கொடுத்துவிட்டதால் மளமளவென்று அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அவருடம் தன்னுடைய உழைப்பை போட்டு ஹிட் பாடல்களை கொடுத்துவருகிறார்.

கோலிவுட்டில் பிரபல ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் என யாரின் படமாக இருந்தாலும் இப்போது அனிருத்தான் இசையமைத்துவருகிறார். மேலும் சம்பளத்திலும் பத்து கோடி ரூபாயை அவர் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டும் இசையமைத்துவந்த் அவர் அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வந்த இடம் என்ற ஜவான் படத்தின் சிங்கிள் வெளியானது. பாடலுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.

- Advertisement -

அவரது இசையமைப்பில் இந்த மாதம் ஜெயிலர், அடுத்த மாதம் ஜவான், அக்டோபர் மாதம் லியோ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இப்படி படுபிஸியாக இருந்தாலும் அனிருத்தின் இசைக்கு விமர்சனங்களும் எழுவது வழக்கம். அவரது இசை வெறும் சத்தம்தான்; பாடல் வரிகளுக்கு முக்கியத்துவமே கொடுக்க மறுக்கிறார் என பலர் ஓபனாக பேசுகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் பல வருடங்கள் கழித்து அனிருத்தின் இசையை யாரும் கேட்கமாட்டார்கள் எனவும் பலர் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஏ.ரஹ்மான்தான் இப்போதும் டாப்பில் இருக்கிறார். அவர் சர்வதேச அளவில் ரீச் ஆகிவிட்டார். பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு இசையமைக்க வேண்டுமென்றால் ரஹ்மானிடம்தானே செல்கிறார்கள். ஒரு பெரிய புராஜெக்ட் செய்ய வேண்டுமென்றாலும் அவரிடம்தானே போகிறார்கள். தமிழ் சினிமா இசை வரலாற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மும்மூர்த்திகள்தான்.

- Advertisement -

அனிருத்திடம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் போகிறார்தான்.ஆனால் அவர் ஹிந்தியிலோ, தெலுங்கிலோ எவ்வளவு செய்துவிட்டார். ஆனால் ரஹ்மானோ ஹாலிவுட்டில் செய்துவிட்டார், லண்டனில் இசையமைத்துவிட்டார், சீனாவில் இசையமைத்துவிட்டார். இப்படி சர்வதேச அளவிலான ரீச் ரஹ்மானுக்கு மட்டும்தான் இருக்கிறது. அவரது வீச்சுக்கு ஈடுகொடுக்கும் தலைமுறை இதுவரை வரவில்லை. அந்த இடத்தை யாராலும் தொட முடியாது என்பதுதான் உண்மை” என்றார்.

ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதனையடுத்து பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்