- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நன்றாக சுவாசிக்கிறேன், இசைஞானியின் மாறுபட்ட பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியம் - கடும் விமர்சனங்களால்...

நான் நன்றாக சுவாசிக்கிறேன், இசைஞானியின் மாறுபட்ட பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியம் – கடும் விமர்சனங்களால் இளையராஜா மாறி விட்டாரா?

- Advertisement -

சமீபகாலமாக இசைஞானி இளையராஜா கடுமையான விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார். ஏதேனும் ஒரு கருத்தை வில்லங்கமாக பேசினால், அது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது. இளையராஜா இசை ரசிகர்கள் ஒருபுறமும், பொதுவான ரசிகர்கள் ஒருபுறமும் இளையராஜாவை மையப்படுத்தி கடுமையாக விவாதிக்கின்றனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜாவின் நெருங்கிய நண்பர். சுவாமி என்றுதான் இருவருமே அழைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஆன்மிக நண்பர்களாக உள்ளனர். ஆனால் ரஜினி நடித்த கூலி படத்தில் என் இசையை என் அனுமதியின்றி எப்படி பயன்படுத்தலாம் என இளையராஜா, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

அதே போல் நான் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே எனக்கு தான் சொந்தம். அதை யாருமே என் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில்தான் இளையராஜா, எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற இரண்டு ஜாம்பவான்களின் நட்பும் பல ஆண்டுகளுக்கு முன் முறிந்து போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபத்தில் பர்சனலாக ஒரு வீடியோ வெளியிட்டு பேசிய இசைஞானி இளையராஜா, என்னை பற்றி அடிக்கடி செய்திகள் வருவதாக எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் கூறுகின்றனர். நான் அதை எல்லாம் கவனிக்கிறது இல்லை. அதை கவனிப்பதும் என் வேலை அல்ல. நான் என்னுடைய வழியில், என் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 35 நாட்களின் சிம்பொனி இசையை எழுதி முடித்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் சென்னை ஐஐடி, இளையராஜா சார்பில், மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த மையம் கட்டுவதற்கான அடிக்கட்டல் நாட்டு விழாவில் பங்கேற்ற இளையராஜா அடிக்கல் நாட்டி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய இளையராஜா, ஒரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்ள சென்னைக்கு வந்தேன். ஆனால் அன்று முதல் இன்று வரை நான் இசை கற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. மூச்சு விடுவது இயற்கையாக நடப்பது போல், இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசைப்பதாக சொன்னால், நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்று சொல்வது போல் உள்ளது, என கூறியிருக்கிறார்.

சற்று முன்