- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு நான் புரிய வைப்பேன் என்று சொன்ன இசையமைப்பாளர் தினா - அனல் பறக்க போகுது...

இளையராஜாவுக்கு நான் புரிய வைப்பேன் என்று சொன்ன இசையமைப்பாளர் தினா – அனல் பறக்க போகுது இசையமைப்பாளர் சங்கத் தேர்தல்

- Advertisement -

தலைவர் பதவியை விட்டுக்கொடு என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசிய நிலையில், அவருக்கு நான் புரிய வைப்பேன் என, இசையமைப்பாளர் தினா பதிலளித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சங்கத் தேர்தல் சூடுபிடிக்க துவங்கி விட்டது. வரும் நாட்களில் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை, பரபரப்பை தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் சங்கத் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இப்போது இசையமைப்பாளர் சங்கத் தலைவராக இசையமைப்பாளர் தினா இருந்து வருகிறார். மீண்டும் அவர் 3வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இளையராஜா பேசிய ஆடியோ, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

இசையமைப்பாளர் சங்கத்தை முதன் முதலில் ஆரம்பித்தது எம்பி சீனிவாசன். தமிழ் சினிமா துறையில் முதன்முறையாக, இந்திய அளவில் துவங்கப்பட்ட சங்கமும் இதுதான். இசையமைப்பாளர் சங்கத்துக்கு என சில விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளது. அதன்படி இந்த சங்கத்தில் ஒருவர், இரண்டு முறை மட்டுமே தலைவராக இருக்கலாம்.

அந்த வரைமுறை, அனைவருக்கும் பொதுவானது, தினா, ஏற்கனவே நீ இரண்டுமுறை இந்த சங்கத்துக்கு தலைவராக இருந்துவிட்டாய். அதனால், அடுத்த தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பது, மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பாக, கருத்தாக உள்ளது.

- Advertisement -

சங்கத்துக்குள் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் இருந்தாலும், அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. நீ நல்லது செய்வது வேறு விஷயம். ஆனால் ஒரு தலைவராக மற்றவர்களின் கோரிக்கையை ஏற்பதும் முக்கியம். இரண்டு முறை தலைவராக இருந்து, நல்லது செய்துவிட்ட மன நிறைவோடு இந்த தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என, அந்த ஆடியோவில் இளையராஜா பேசி இருக்கிறார்.

இதுகுறித்து தினா கூறுகையில், விரைவில் சங்கத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 1960களில் எம்பி சீனிவாசன் கூறிய உத்தரவுகளை பின்பற்றி இளையராஜா கூறியிருக்கிறார். ஆனால், காலத்திற்கேற்ப அவ்வப்போது சங்க விதிமுறைகள் மாறும். நாங்கள் மாற்றி இருக்கிறோம். அதன்படி ஒருமுறை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் சிலர் தவறாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரை நேரில் சந்தித்து, நான் புரிய வைப்பேன் என தெரிவித்துள்ளார் தினா.

- Advertisement -

சற்று முன்