- Advertisement -
Homeபொழுதுபோக்குகொரோனா குமார் பட விவகாரம்; தான் வாங்கிய ரூ.1 கோடியை திருப்பி கொடுக்கத் தேவையில்லை எனக்...

கொரோனா குமார் பட விவகாரம்; தான் வாங்கிய ரூ.1 கோடியை திருப்பி கொடுக்கத் தேவையில்லை எனக் கூறும் சிம்பு… அப்படி என்னதான் வழக்கில் நடக்குது….

- Advertisement -

கோலிவுட்டில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நாயகன் யார் என்றால், அது நிச்சயம் சிம்புவாக தான் இருக்கும். எந்த ஒரு படப்பிடிப்புக்கும் அவர் சரியாக வருவதில்லை, முன்பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது என அடுக்கடுக்கான புகார்கள் அவர் மீது கடந்த காலத்தில் எழுந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்விக்கு முழுக்க முழுக்க சிம்பு தான் காரணம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார். சிம்பு சூட்டிங் வராததால்தான் தனக்கு அவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்றும், அதற்கு அவர் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் பலமுறை முறையிட்டார்.

- Advertisement -

பீப் பாடல் முதல் பல பிரச்சனைகளில் சிக்கி இருந்த சிம்புவுக்கு, சிறிது காலம் திரைப்படங்களே வெளியாகாமல் இருந்த நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது புகார்களில் எதுவும் சிக்கிக் கொள்ளாமல் திரைப்படங்களில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அவர் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ஓரளவு வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கொரோனா குமார் என்னும் படத்தில் அவர் ஒப்பந்தமானார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களின் இயக்குனர் கோகுல் இதை எடுப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் படப்பிடிப்பிற்கு சிம்பு ஒழுங்காக வரவில்லை என்றும், தங்கள் படத்தை முடித்துவிட்டு அவர் பிற படங்களில் நடிக்க வேண்டும் எனவும் கூறி வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில், வேல்ஸ் நிறுவனத்திடம் சிம்பு முன்பணமாக பெற்ற ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இதன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர, சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021 ஆம் ஆண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின்படி, ஓராண்டுக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றால் முன் பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த தகவல் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சிம்பு மீது தவறு இல்லாத நிலையில் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் வாதிட்டார். இதற்கு பதிலளிக்க வேல்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் மாதம் ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

- Advertisement -

சற்று முன்