- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான விடுதலை 2 படம் - உலகளவில் மொத்த வசூல்,...

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான விடுதலை 2 படம் – உலகளவில் மொத்த வசூல், தமிழ்நாட்டில் வசூல் நிலவரம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்புடன் வெற்றிப் படங்களாக இருந்துள்ளன. பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை விசாரணை அசுரன் விடுதலை ஆகிய படங்கள் அபரிமிதமான வெற்றியை பெற்றன. இதில் 4 படங்களில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார்.

கடந்தாண்டில் சூரி நாயகனாகவும், விஜய் சேதுபதி தீவிரவாதி கேரக்டரிலும் நடித்து வெளியான படம் விடுதலை. இந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் போலீஸ் ஜீப் டிரைவராக சூரி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் தங்கை பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

மேலும் போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் கௌதம் மேனன், சேத்தன் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார். நேற்று வெளியான விடுதலை 2ம் பாகத்தில் அவர்களுடன் மஞ்சு வாரியார், கென்னி, கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

வழக்கமாக முதல் பாகம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகமாக வெளியாகும் பெரும்பாலான படங்கள் பலத்த தோல்வியை தழுவும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றும் படமாக இருக்காது. இதில் சில படங்கள் மட்டுமே, 2ம் பாகத்திலும் ரசிகர்களிடம் அதே வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த ரகத்தில் விடுதலை 2 படமும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியன் 2, சிங்கம் 3, சந்திரமுகி 2 சண்டக்கோழி 2, பிச்சைக்காரன் 2 என சில படங்கள் பலத்த தோல்வியடைந்த நிலையில் டிமாண்டி காலனி 2 அரண்மனை 2 மற்றும் அரண்மனை 4, பில்லா 2 போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்ற வெற்றி படங்களாக இருந்திருக்கின்றன. அதே போல் விடுதலை 2 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

நேற்று உலகம் முழுவதும் விடுதலை 2 படம் ரிலீசான நிலையில் உலகளவில் இந்த படம் ரூ. 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. நேற்று அரசு அனுமதியுடன் விடுதலை 2 தியேட்டர்களில் 5 காட்சிகளாக திரையிடப்பட்டது. இன்று சனி, நாளை ஞாயிறு விடுமுறை தினங்களாக இருப்பதால் இன்னும் கணிசமாக வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்