- Advertisement -
Homeபொழுதுபோக்குஇலங்கையில் நடந்த மதராஸி படப்பிடிப்பு… அப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது - ஓபனாக பேசிய...

இலங்கையில் நடந்த மதராஸி படப்பிடிப்பு… அப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது – ஓபனாக பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த விழாவில் பங்கேற்றார்.

மதராஸி பட விழாவில் படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பேசியதாவது, மதராஸி படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பு மிகவும் பெரியது. இதில் அனிருத் இன்னொரு ஹீரோ என்றும் தாராளமாகச் சொல்லலாம். நான் சோர்வாக இருக்கும் போது விக்ரம் படத்தின் பின்னணி இசையை கேட்பேன்.

- Advertisement -

நடிகர் விஜயுடன் வேலை பார்க்கும் போது அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும். அதே மாதிரிதான் அனிருத்தும் தனித்தன்மையானவர். ஹீரோ தவிர ஹீரோயினாக நடித்த ருக்மணி வசந்த் மற்றும் பிஜூமேனன் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஐயப்பனும் கோஷியும் படத்தை பார்த்த பிறகுதான் இந்த படத்தில் பிஜூ மேனனை ஒப்பந்தம் செய்தேன்.

இந்த படத்தில் 12 உதவி இயக்குனர்கள் பணி செய்தனர். அவர்களது பங்கும் மிக முக்கியமானது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் உழைப்பு அபாரமானது. இலங்கையில் மதராஸி படப்பிடிப்பை நடத்திய போது பயங்கரமான புயல் வீசியது. அப்போது ஒரு காட்சிக்காக உயரமான இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும் போது அவரைவிட உயரமான இடத்தில் ஒளிப்பதிவாளர் நின்றிருந்தார்.

- Advertisement -

புயல் காற்றால் ட்ரோன் கேமரா யார் மீதும் மோதி விடக்கூடாது என்று ஒளிப்பதிவாளர் ஓடிப் போய் அதை பிடித்தார். அப்போது பிளேடு அவரது கையில் பட்டு விரல் தனியாக வந்துவிட்டது. நாங்கள் ஓடிப்போய் அவரது விரலைத் தேடி கண்டுபிடித்து எடுத்துக் கொடுத்தோம். மருத்துவமனைக்கு சென்று விரலைச் சேர்த்த பிறகு அடுத்த நாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டார்.

மதராஸி நல்ல கமர்சியல் படமாக ரசிகர்கள் விரும்பும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த விழாவில் பேசியிருக்கிறார். இதுவரை மதராஸி படத்தின் பிரமோஷனுக்காக பல நேர்காணல்களில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ், படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளரின் விரல் துண்டான சம்பவம் குறித்து கூறவில்லை. இந்த நிகழ்ச்சியில்தான் வெளிப்படையாக அதைப் பற்றி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்