- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை தேர்வில் கச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்... அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்று...

கதை தேர்வில் கச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்… அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்று தெரியுமா… எஸ்.கே.வை பார்த்து கத்துக்கோங்கப்பா…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் முதலில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தொலைக்காட்சியில் தன்னை ஒரு நகைச்சுவை நாயகனாகவே ரசிகர்கள் பார்த்து விட்டதால் அதனையே ஆரம்பத்தில் தொடர்வோம் என்று சரியாக முடிவு எடுத்து அந்த பாதையிலேயே சிவகார்த்திகேயன் பயணித்தார்.

 

- Advertisement -

சிவகார்த்திகேயனின் இந்த முடிவு அவருக்கு பிளஸ் ஆகவே அமைந்தது. மனம் கொத்திப் பறவை, மெரினா, 3, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அவரது ரூட் கிளியர் ஆக இருந்தது. இங்கிருந்து ஆக்சன் ஹீரோவாக மாற ஆசைப்பட்ட அவர், சோதனை முயற்சியாக காக்கி சட்டை திரைப்படத்தில் நடித்தார்.

 

- Advertisement -

அதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். பிறகு ஒரு நகைச்சுவை படம் ஒரு ஆக்சன் படம் என மாறி மாறி சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். ஆனால் நடுவே அவரது பாதையில் சிக்கல் ஏற்பட்டது. சீம ராஜா, ஹீரோ, மிஸ்டர் லோக்கல் என சிவகார்த்திகேயன் நடித்த அத்தனை திரைப்படங்களும் மொக்கையாக அமைந்தன. இதனால் மீண்டும் தனது இருப்பிடத்தை பிடிக்க போராடினார் சிவகார்த்திகேயன்.

 

இந்த சமயத்தில்தான், சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் டார்க் ஹியூமராக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் கிட்டியது. இதனைத் தொடர்ந்து, டான் படத்தைக் கொடுத்து மீண்டும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டினார் சிவகார்த்திகேயன்.

 

தற்போது அவர் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து வருகிறார். சோதனை முயற்சியாக அவர் நடித்த மாவீரன் திரைப்படம் ஹிட்டானது. தற்போது ராணுவ பின்னணி கொண்ட திரைக்கதையாக அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக தனது 23வது திரைப்படத்திற்காக முருகதாஸ் உடன் இணைந்து இருக்கிறார். இதில் அவர் மனம் நலம் குன்றிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறார் சிவ கார்த்திகேயன். அதன் பிறகு 25வது படத்தை வெங்கட் பிரபுவிடம் ஒப்படைத்து இருக்கிறார். இது அரசியல் கலந்த படம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் அவர், எச் வினோத்திடம் கதை கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஜா திரைப்படத்தை இயக்கிய பேஷன் ஸ்டுடியோஸ்தான் இந்த படத்தை தயாரிக்கிறதாம். இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்