- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா, ஒரு வழியாக கன்பார்ம் பண்ணிட்டாங்க, ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் எப்போ ரிலீஸ்...

அப்பாடா, ஒரு வழியாக கன்பார்ம் பண்ணிட்டாங்க, ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? – போடு வெடிய, கமல் ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

கடந்த 1990களில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்தியன் தாத்தாவாக ஒரு கமலும், சந்துரு கேரக்டரில் அவரது மகனாக மற்றொரு கமலும் 2 வேடங்களில் நடித்திருந்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி, நிழல்கள் ரவி, நெடுமுடி வேணு, பாலா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், லஞ்சம் ஊழல் குறித்து பேசிய மிக அருமையான படமாக இருந்தது.

இந்த படத்தில், கமலின் இந்தியன் கெட்டப், பெரிய அளவில் ரீச் ஆனது. குறிப்பாக இந்திய சுதந்திர போராட்ட கால காட்சிகள், அற்புதமாக படமாக்கப்பட்டு இருந்தன. கமலுக்கு இணையாக மேக்கப்பிலும், நடிப்பிலும் சுகன்யாக அசத்தியிருந்தார். சில காட்சிகளே வந்தாலும் கஸ்தூரி நடிப்பு அழுத்தமாக இருந்தது. ஷங்கர் படங்களில் இதுவும் மிக முக்கியமான படமாக இருந்தது.

- Advertisement -

அதன்பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்கினார் இயக்குனர் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம், 2ம் பாகமாக உருவான போதே 3ம் பாகத்துக்கான கண்டென்ட் கிடைத்து விட்டதால், ஒரே கல்லில் 3 மாங்காய் என இந்தியன் 2, இந்தியன் 3 என 2 பாகங்களை உருவாக்கி வந்தார் டைரக்டர் ஷங்கர்.

ஆனால் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு இடையிடையே ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பிலும் ஷங்கர் கவனம் செலுத்துவதால் இந்தியன் 2 மற்றும் 3 பாகங்கள், கேம் சேஞ்சர் என 3 படங்களுக்கான விஷயங்களையும் ஷங்கர் கவனித்து வருகிறார்.

- Advertisement -

இந்தியன் 2 படமும் லஞ்சம் ஊழல் குறித்தே பேசுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்தால், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும். ஆளும் மத்திய அரசுக்கு அது தலைவலியாக மாற வாய்ப்புள்ளது. ஓட்டுகளுக்கும் சிக்கல் ஏற்படுத்தும் என்பதால், இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது.

அதாவது பான் இந்தியா படமாக இருப்பதால், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் முடிந்த பின், வரும் ஜூன் 13ம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ள நிலையில், கமல் பங்கேற்க வேண்டிய பாடல் காட்சியை அதற்குள் எடுத்து, இசை சார்ந்த விஷயங்களையும் முடித்து ஜூன் 13ல் ரிலீஸ் என, இன்று மாலை லைக்கா நிறுவனமும், டைரக்டர் ஷங்கரும் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்