- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக் சுப்பராஜ் படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம்; சூர்யா 45 படத்தின் டைரக்டர் யார்...

கார்த்திக் சுப்பராஜ் படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம்; சூர்யா 45 படத்தின் டைரக்டர் யார் தெரியுமா? – போடு வெடிய, ஆனா டைரக்டர் மாதிரி ஓயாம பேசிடாதீங்க பாஸ்!

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சூர்யா நடித்த பல படங்கள் வெற்றி படங்களாகவும் சூப்பர் ஹிட் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம், ஏழாம் அறிவு, கஜினி, வேல், ஆதவன், அயன், காக்க காக்க போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படங்களாக இருந்தன.

ஆனால் சமீப காலமாக சூர்யா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. உதாரணமாக எதற்கும் துணிந்தவன், காப்பான், தானா சேர்ந்த கூட்டம், அஞ்சான் போன்ற படங்கள் சூர்யாவுக்கு பலத்த தோல்வியை தந்தன. ஜெய்பீம், சூரரைப் போற்று படங்களுக்கு பிறகு சூர்யா படம் எதுவும் வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய வணங்கான் படமும் கைநழுவி போனது. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க இருந்த சூர்யா அந்தப் படத்திலும் சில நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு படப்பிடிப்பில் இருந்து விலகி விட்டார். இந்த இரண்டு படங்களுமே மிக முக்கியமான படங்களாக சூர்யாவுக்கு அமைந்திருக்க வேண்டிய சூழலில் சூர்யாவின் அலட்சிய போக்கால் அந்த இரண்டு படங்களும் கைநழுவி போய் விட்டன.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். வரலாற்று படமான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் வெளி வந்தால் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த படத்தை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

- Advertisement -

இந்த படம் ரஜினி படத்துடன் வெளியாகி மோதியிருந்தால், வேட்டையன் படத்தை விட கங்குவா படம் சிறப்பாக ஓடி இருந்தால், நடிகர் சூர்யாவுக்கு ரஜினி படத்தையே தோற்கடித்தவர் என்ற பெருமையை பெற்று இருக்கும். தற்போது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்து யாருடன் கை கோர்க்க போகிறார் என்பதில் பல நாட்களாக சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இப்போது சூர்யா நடிக்கும் அடுத்த படம், 45வது படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போட்ட ஹிட் படங்களை இயக்கிய ஆர் ஜே பாலாஜி, நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்