- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் நடிகை இவர்தானா? சரியான சாய்ஸ்தான் என்று குதூகலித்த ரசிகர்கள்!

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் நடிகை இவர்தானா? சரியான சாய்ஸ்தான் என்று குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். முதல் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். படம் அபார வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு பாலகுமாரன் எழுதிய இரும்புக்குதிரைகள் என்ற தலைப்பை தான் வெற்றிமாறன் முதலில் வைக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொல்லாதவன் படத்துக்கு கிடைத்த அபார வரவேற்பை அடுத்து தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை இயக்கினார். இதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து வடசென்னை விசாரணை அசுரன் விடுதலை விடுதலை 2 படங்களை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படத்துக்கான ஸ்கிரிப் ரைட்டிங் பணியில் வெற்றிமாறன் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொங்கலுக்கு பிறகு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்க உள்ளது. இதில் ஹீரோவாக சூர்யா, முக்கிய கேரக்டரில் இயக்குனர் அமீர் ஆகியோர் நடிப்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இதுவும் ஒரு கிராமத்து கதை களத்தில் உருவாகிறது. ஊரில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளை, சம்பவங்களை கதைக்களமாக கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் அதிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எழுந்த நிலையில், இப்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான் இந்த படத்தின் நாயகி என்று தெரிய வந்துள்ளது. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஓடக்காரி பூங்குழலி கேரக்டரில் நடித்தவர். மேலும் கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது சூரி நடித்து வரும் மாமன் படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இதுவரை சூர்யாவும் ஐஸ்வர்யா லட்சுமியும் ஜோடியாக நடித்தது இல்லை. இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி எந்தவிதமான நடிப்பிலும் திறமை காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி, வாடிவாசல் படத்தில் நாயகியாக நடிப்பது சரியான சாய்ஸ்தான் என்று சூர்யா ரசிகர்களும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்