- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம்…. கதை இதுதான் - காதலுக்கு...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம்…. கதை இதுதான் – காதலுக்கு ஆப்பு வைக்கும் அந்த கதை தானாம் இதுவும்!

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நாயகனாக நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்த பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து அவரே இயக்கிய படம் லவ் டுடே. இவானா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் காதலர்கள் மொபைல் போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

லவ் டுடே படத்தில் சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது.

- Advertisement -

இதுவும் காதல் கதை தான். ஆனால் படிக்காத பட்டதாரி இளைஞன், போலியான சர்டிபிகேட் தந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உச்சத்துக்கு வரும் நிலையில், அந்த போலியான சர்டிபிகேட் விவகாரம் அந்த இளைஞன் படித்த கல்லூரி பிரின்ஸிபல் ரூபத்தில் வந்து விஸ்வரூபம் எடுப்பதே கதை.

இந்த படத்தில் மிஷ்கின் கௌதம் மேனன் கேஎஸ் ரவிக்குமார் அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் இவானா விஜே சித்து மரியன் ஜார்ஜ் என ஒரு கூட்டமே நடித்திருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது 4வது படமாக எல்ஐகே என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் கதை என்னவென்றால், மொபைல் ஆப் மூலம் ஒரு காதல் ஜோடி இணைகிறது. ஒரு கட்டத்தில் அந்த மொபைல் ஆப் அவர்களது காதலை பிரிக்கிறது. பிறகு டைம் டிராவல் மூலம் மொபைல் ஆப் இல்லாத காலகட்டத்துக்கு செல்லும் அந்த காதல் ஜோடி மீண்டும் இணைவதுதான் இந்த படத்தின் கதை.

இதற்காக சிங்கப்பூர் மலேசியா துபாய் ஜப்பான் என ஏகப்பட்ட வெளிநாடுகளில் எல்ஐகே படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது. 2040 20250ம் ஆண்டுகளில் சென்னை எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதமாக வெளிநாடுகளில் அந்த காட்சிகளை படம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் காதலுக்கு ஆப்பு வைக்கும் மொபைல் ஆப் கதைதான் இதுவும் என்பது வௌிச்சத்துக்கு வந்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்