- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில்; நான் எப்பவுமே தலைவர் வழிதான்னு...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில்; நான் எப்பவுமே தலைவர் வழிதான்னு எஸ்கே அழகா சொல்லிட்டாரே?- டைட்டில் வேற லெவல்தான்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில், ஏலியன் பொம்மை நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் 6 ஆண்டுகளாக ஷூட்டிங் நடந்து பின் ரிலீசானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். ராணுவ வீரன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன், டைரக்டர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி நடித்துள்ளார். தர்பார் படம் தோல்விக்கு பிறகு, ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை தனது கம்பேக் படமாக தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் மாவீரன், டாக்டர் படங்களை தவிர சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்த நிலையில், அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தை தான் சிவகார்த்திகேயனும் பெரிய அளவில் நம்பியிருக்கிறார். அதற்கான இந்த படங்களில் தனது கேரக்டர்களை இயன்றவரை சிறப்பாக நடித்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

அதிலும், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் எஸ்கே 23 படத்தில், பழைய படங்களில் நடித்த தனது வழக்கமான நடிப்பு பாணியே இல்லாமல், புதிய பாணியில் நடிக்குமாறு, ஏஆர் முருகதாஸ் அறிவுறுத்திய நிலையில், இதற்கென ஒரு பயிற்சியாளரை வைத்து, தனது பழைய நடிப்பு சாயல் வராமல், புதுவிதமாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள எஸ்கே 23 படப்பிடிப்பு கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் நிலையில், இந்த படத்துக்கு சிங்கநடை என டைட்டில் வைக்கப்பட உள்ளது. படையப்பா படத்தில், ரஜினிகாந்த் அறிமுகமாகும் போது, சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடல் வரியில் வரும் வார்த்தைகளில் இருந்து, சிங்க நடை என்ற 2 வார்த்தைகள், தீவிர ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் படத்துக்கு டைட்டிலாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்