எப்போதுமே கதையை நம்பி எடுக்கப்படும் படங்கள் பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. ஹீரோக்களை நம்பி மட்டுமே எடுக்கப்படும் படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்திக்கின்றன. எனினும் பெரிய பட்ஜெட் பெரிய நடிகர்கள் என உருவாகும் படங்கள் கமர்ஷியல் குப்பைகளாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன.
அதே நேரத்தில் காக்கா முட்டை சித்தா பார்க்கிங் குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் போன்ற கதை அம்சம் கொண்ட படங்கள் பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படங்கள் பெரிய வெற்றியை பெறுவது நல்ல கதையம்சம் உள்ள திரைக்கதையால் மட்டுமே.
அந்த படங்களின் வரிசையில் இப்போது சூரி நடித்த மாமன் படமும் சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படமும் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் உருவான மாமன் படம் ரூ. 28 கோடி டூரிஸ்ட் பேமிலி படம் ரூ. 78 கோடியை கடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு நடிகராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டவர். சின்னதம்பி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் குணசித்திர வேடங்களில் பிரபு நடித்து வருகிறார். அவரது மகன் விக்ரம் பிரபு. கும்கி என்ற படத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
ஆனால் அதற்கு பின் விக்ரம் பிரபு நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அவரது பெயர் சொல்லும் அளவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமையவில்லை. இந்நிலையில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம்தான் லவ் மேரேஜ். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தில் திருமண வயது கடந்தும் திருமணம் செய்யாத நிலையில், மனதில் உள்ள சோகங்களை மறைத்துக்கொண்டு கெத்தாக வாழும் ஒரு இளைஞன் கேரக்டரில் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதுவரை அவர் நடித்த படங்களின் இமேஜை எல்லாம் காணாமல் போகும் விதமான ஒரு வித்யாசமான கேரக்டராக, இது விக்ரம் பிரபுவுக்கு பேசப்படும் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.





