- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு திடீர் முடிவெடுத்த சமந்தா, அப்போ இனிமே அவங்க லைப்ல அது இல்லையா? -...

அப்படி ஒரு திடீர் முடிவெடுத்த சமந்தா, அப்போ இனிமே அவங்க லைப்ல அது இல்லையா? – மத்தவங்க பாராட்டினாலும் ரசிகர்களுக்கு கவலைதான்

- Advertisement -

நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கத்தி, தெறி, சீமராஜா, தங்கமகன், காத்து வாக்குல ரெண்டு காதல், நான் ஈ போன்ற படங்களில் சமந்தா நடிப்பு, மிகவும் பாராட்டைப் பெற்றது.

தெலுங்கு படவுலகின் ஸ்டார்ஸ் தம்பதி நாகர்ஜூனா, அமலா மகன் நாக சைதன்யாவை, காதலித்தார். கடந்த 2017ம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 4 ஆண்டுகளில் அதாவது 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டனர். சினிமாவில் சமந்தாவை நடிக்க அனுமதி மறுத்ததே பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் மூலம், சகல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் செம வைரல் ஆகி, டிரண்டிங் ஆக அப்போது பேசப்பட்டார். தொடர்ந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

ஆனால் திடீரென மயோசிட்டிஸ் என்ற தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றார். பல மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்தும் தொடர்சிகிச்சை பெற்றார். எனினும் பழையபடி அவர் பூரண ஆரோக்கியத்தை பெறாத நிலையில் இன்னும் உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் தெலுங்கில் நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படம் வெளியானது. இதற்கு முன்பே கமிட் ஆன சென்னை ஸ்டோரில் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துவரும் சமந்தா வேறு படங்கள் எதிலும் நடிக்க இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், சில மாதங்களுக்கு பிறகே அவர் மற்ற படங்களை ஒத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரதியுஷா என்ற தொண்டுநிறுவனம் வாயிலாக பல உதவிகளை செய்துவரும் சமந்தா, விரைவில் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் தாய்மை அடையாத சமந்தா, பிள்ளை பாசத்தில் இப்படி ஒரு முடிவெடுத்து இருப்பதால், மீண்டும் திருமணம் தனது வாழ்க்கையில் இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். இனி முரட்டு சிங்கிளாக சமந்தா வாழ்க்கையை தொடர்வது ரசிகர்களுக்கு கவலை தந்தாலும், இதுபோன்ற சமுதாய பொறுப்புணர்வுடன் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க சமந்தா முன்வந்திருப்பதை பலரும் பாராட்டவே செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்