- Advertisement -
Homeபொழுதுபோக்குசுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகன் படத்துக்கு விழுந்த சம்மட்டி அடி… விரக்தியின் உச்சம் தொட்ட தளபதி ரசிகர்கள்...

சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகன் படத்துக்கு விழுந்த சம்மட்டி அடி… விரக்தியின் உச்சம் தொட்ட தளபதி ரசிகர்கள் – இப்படி ஆகுமுன்னு நாங்க எதிர்பார்க்கலையே?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி பிடி ஆஷா யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு செய்தது.

அப்போது 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தனி நீதிபதி பிடி ஆஷா விதித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் இதுகுறித்து மனுதாக்கல் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு வருகிற 21ம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் என்பது மேலும் 2 வாரங்கள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மாசி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி பேசினார். ஜனநாயகன் படத்துக்கு வேண்டும் என்றே சான்றிதழ் தர மறுப்பதாக அவர் குறறம் சாட்டி வாதாடினார். அப்போது பேசிய நீதிபதிகள், கோர்ட்டை நீங்கள் அணுகியிருக்கக் கூடியது மிகவும் அதிவேகமான செயல்பாடு. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடினீர்கள்?

- Advertisement -

அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் 16ம் தேதியே படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று திரைப்பட தணிக்கை வாரியம் சொன்னபோது அதை ஏன் நீங்கள் எதிர்த்து இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை? இது தொடர்பாக மீண்டும் நீங்கள் சென்னைக்கு செல்லுங்கள். இங்கு எந்த வாதத்தையும் நாங்கள் ஏற்க விரும்பவில்லை.

இந்த வழக்கிலும் நாங்கள் தலையிட விரும்பவில்லை. நீங்கள் போகலாம். மேலும் வருகிற 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். உங்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர்களிடம் சென்று சொல்லுங்கள் என்று உத்தரவாக கூறிவிட்டனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்காத நிலையில் தளபதி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்