நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு முன்னணி இளம் நட்சத்திர நடிகராக இருக்கிறார். ஆனால் தொடர்ச்சியாக அவரது படங்கள் அடுத்தடுத்து வெளிவருவது இல்லை. இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் என அவரது படங்கள் வெளியாக தாமதம் ஆவது அவரது ரசிகர்களை விரக்தியடைய செய்கிறது.
தயாரிப்பாளர்களுடன் பிரச்னை இயக்குனர்களுடன் சண்டை காதல் கிசுகிசு என பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிப்பதில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். ஆனால் தக்லைஃப் படத்துக்கு பிறகு அவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை.
இதற்கிடையே நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்த சில படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. எனினும் இப்போது இயக்குனர்கள் வெற்றிமாறன் அஸ்வத் மாரிமுத்து கீர்த்திஸ்வரன் மற்றும் எச் வினோத் ஆகிய இயக்கத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆன நிலையில், அரசன் படத்தில் இப்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சிம்பு மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்துக்காக வெற்றிமாறனுக்கு சிம்பு மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் என்று சிம்பு திட்டவட்டமாக தயாரிப்பாளர் எஸ் தாணுவிடம் கூறியிருக்கிறார். அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் துவங்கப்பட உள்ளது.
இந்த படத்துக்காக நடிகர் சிம்பு மொத்தம் 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் அடுத்த 2027ம் ஆண்டில் பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் இந்த படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதிலும் சிம்பு உறுதியாக இருக்கிறார். இனி படங்கள் தாமதம் என்பதில் எந்தவிதமான காம்ப்ரமைஸ்சும் கிடையாது என்ற முக்கிய முடிவுக்கு சிம்பு வந்திருக்கிறார்.





