- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்பு குறித்து இப்படி ஒரு தகவலா? அட என ஆச்சரியப்பட்ட எஸ்டிஆர் ரசிகர்கள், ...

நடிகர் சிம்பு குறித்து இப்படி ஒரு தகவலா? அட என ஆச்சரியப்பட்ட எஸ்டிஆர் ரசிகர்கள், பல உலக நாடுகளில் இவருக்கு ஸ்பெஷல் அழைப்பு இருக்குதாமே? – போட்றா வெடிய!

- Advertisement -

இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு என்கிற சிலம்பரசன், 1984ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதுவரை 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக, மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு நடித்த தக்லைப் படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை சிம்பு நடப்பாண்டில் நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிலம்பரசன், அவர் நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். சொந்த குரலில் பாடிய அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவரது தந்தை டி ஆர் ஒரு பாடகராக ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்தவர். தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி பாடலையும், பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசை போன்ற எவர்கிரீன் பாடல்களை அவர் பாடியவர்.

- Advertisement -

தந்தையை போலவே சிம்புவும் நல்ல பாடகராக பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். அவரது படங்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்காக பாடியிருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களுக்கு சிம்பு பாடியிருக்கிறார். அந்த வகையில் சிம்பு இதுவரை 150 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கே ஆச்சரியமான தகவலாகும்.

இந்நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரில் யுவன் சங்கர் ராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில், நடிகர் சிம்புவும் பங்கேற்று உள்ளார். சிம்புவும், யுவனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்று 6 பாடல்களை பாடியிருக்கிறார். அவரது பாடல்களை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடி வரவேற்று, அந்த இடமே செம வைப்பாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் சிம்புவை உலக நாடுகள் பலவற்றில் இருந்து, எங்கள் நாட்டில் வந்து இசை நிகழ்ச்சி நடத்துங்கள், அதுவும் நீங்கள் மட்டுமே பாடக்கூடிய வகையில் அந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள், உங்கள் குரலில் நேரடியாக நீங்கள் பாடுவதை கேட்க ஆர்வமாக இருக்கிறோம் என பல இசைக்கச்சேரி ஏற்பாட்டாளர்கள் சிம்புவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சிம்பு 150 பாடல்களுக்கு மேல் பாடியவர் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல நாடுகளில், இசைக்கச்சேரி நடத்தும் ஒரு யோசனையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள், பல நாடுகளில் இசை கச்சேரி நடத்துங்கள். அதே நேரத்தில் அடிக்கடி படங்களிலும் நடியுங்கள். உங்கள் படம் ஆண்டுக்கணக்கில் வராமல் ஏமாற்றத்தில் இருக்கிறோம் என்று கூறி சிம்புவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்