- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழை தவிர்த்துவிட்டு, தெலுங்கில் நடிப்பது ஏன், நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் ஸ்டேட்மென்ட் - கமல்ஹாசன் மகளே...

தமிழை தவிர்த்துவிட்டு, தெலுங்கில் நடிப்பது ஏன், நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் ஸ்டேட்மென்ட் – கமல்ஹாசன் மகளே இப்படி சொன்னா எப்படி?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் 2வது மனைவி சரிகா. இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமா நடித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் பாடகியாகவும் இருக்கிறார். திருமண வயது கடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் இருவரும் திருமணம் குறித்த ஐடியாவே இல்லாமல் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷூடன் 3 என்ற படத்தில் நடித்தார். பிறகு விஷாலுடன் பூஜை விஜயுடன் புலி மீண்டும் சூர்யாவுடன் சிங்கம் 3 அஜீத்துடன் வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பல படங்களில் நடித்தும் ஸ்ருதிஹாசனுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கும் சில படங்களில் அளவுக்கு மீறிய கவர்ச்சியும் காட்டி நடித்து பார்த்தார். ஆனால் முன்னணி நாயகியாக பெரிய அளவில் வர முடியவில்லை.

இதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு இவரது கவர்ச்சி கலந்த நடிப்புக்கு ரசிகர்கள் அபார வரவேற்பு அளித்தனர். அதனால் தொடர்ந்து தெலுங்கில் நிறைய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ரஜினி நடிக்கும் கூலி படத்திலும் முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாய்ப்பளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், தமிழ் படங்களில் அதிகமாக நடிக்காதது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் எங்கே போனாலும் தமிழ் பொண்ணுதான். சென்னைதான் என்னுடைய வீடு. தமிழ் சினிமாவில் எனக்கு வரும் கதைகள் பிடிக்கவில்லை.

அதனால் படம் பண்ணனுமே என என்னால் தமிழ் படங்களில் நடிக்க முடியாது. நல்ல கதை இருந்தால் நான் நடிக்க ரெடிதான். நான் தமிழில் மீண்டும் நடிக்க தான் ரொம்ப நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு தகுந்த வாய்ப்புதான் வரவில்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் மகளே தமிழில் நல்ல கதைகள் இல்லை, அதனால் நடிப்பதில்லை என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்