- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படம் தாமதமாகி கொண்டே செல்வதற்கு இதுதான் காரணமா... எதுவாக இருந்தாலும் சீக்கிரம் தீர்த்து வைங்கப்பா...

விடாமுயற்சி திரைப்படம் தாமதமாகி கொண்டே செல்வதற்கு இதுதான் காரணமா… எதுவாக இருந்தாலும் சீக்கிரம் தீர்த்து வைங்கப்பா…

- Advertisement -

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அவரின் பிறந்த நாளன்று வெளியானது. இதனை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று கூறவில்லை.

 

- Advertisement -

இந்த ஒரு அறிவிப்போடு சரி, அதன் பிறகு விடாமுயற்சியிலிருந்து எந்த ஒரு தகவலையும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. படப்பிடிப்பும் நடைபெறாமல் தள்ளிக் கொண்டே இருந்தது. அஜித்தும் இதனை கண்டு கொள்ளாமல் பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

 

- Advertisement -

எப்படி இருக்க படத்தைப் பற்றி, ரசிகர்கள் மட்டுமே தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் விடா முயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டில் முழுக்க முழுக்க இந்த படத்தை எடுக்க இயக்குனர் மகிழ்திருமேனி திட்டமிட்டு பயணம் செய்தார்.

 

படத்தில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பதும் உறுதியானது. சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்த வேலையில், எந்த ஒரு அப்டேட்டையும் லைக்கா நிறுவனம் வெளியிடாமல் இருந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த ரசிகர்களுக்கு, விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் கார் ஓட்டி விபத்திற்கு உள்ளாகும் காட்சியை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார்.

 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இது போன்ற விபரீத செயல்களில் அஜித் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இப்படியான சூழலில், விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் இன்னும் நடைபெறாமலேயே இருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அஜித்திற்கும் இடையே ஏற்பட்ட உரசல் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

 

இதனால் தான் அஜித் பிறந்தநாளன்று கூட, தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை என்று இங்கு சிலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது அது காரணம் இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பொருளாதார சிக்கல்தான் விடாமுயற்சி திரைப்படத்திற்கு வினையாகியுள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். படத்திற்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவீதத்துடன் பணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பை சொல்லி வைத்தார் போல் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அனேகமாக இந்த மாத இறுதியில் விடாமல் முயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்