- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி லியோ பார்மூலா தான் எப்பவும், தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு - அந்த...

இனி லியோ பார்மூலா தான் எப்பவும், தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு – அந்த விஷயங்களையும் சரிசெஞ்சா கொஞ்சம் நல்லா இருக்குமே?

- Advertisement -

விஜய் நடித்த லியோ படம், கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆனது. முதலில் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு ஒரு கட்டத்துக்கு பிறகு, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. ரசிகர் சிறப்பு காட்சியுடன் தினமும் 5 காட்சிகள் நடத்திக்கொள்ளவும் உத்தரவில் கூறியது.

ஆனால் காலை 9 மணி முதல், இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடித்துக்கொள்ள அரசு உத்தரவிட்டதால், இரண்டே முக்கால் மணி நேர படத்தை, அந்த கால அவகாசத்துக்குள் முடிக்க முடியாது. தவிர ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும், ரசிகர்கள் தங்களது வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியேற 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும். படத்துக்கு இடைவேளையும் விடுவது முக்கியம் என்பதால் இதற்கு மறுப்பு கிளம்பியது

அதிகாலை 4 மணி காட்சிக்கு கட்டாயம் அனுமதி கேட்ட நிலையில், அரசு தரப்பில் அதை ஏற்கவில்லை. 7 மணி காட்சிக்கும் அனுமதி மறுத்தது. இதையடுத்து லியோ படத் தயாரிப்பாளர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிகாலை காட்சிக்கு அனுமதிப்பதில் பல, சிக்கல்கள் இருப்பதால் கோர்ட்டும் அதற்கு அனுமதி மறுத்தது.

இதையடுத்து லியோ படம், 9 மணி காட்சியாக மட்டுமே திரையிடப்பட்டது. பல தியேட்டர்களில் போதிய நேரமின்மை காரணமாக, 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர் இடையே ஷேர் பிரிப்பதில் 75க்கு 25 என்ற பிரச்னையும் மறைமுக காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது தீபாவளி பண்டிகைக்கு நடிகர் கார்த்தி நடித்த அவரது 25வது படம் ஜப்பான் ரிலீஸ் ஆகிறது. அதே போல் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் லியோ படத்தின் பார்மூலாவை பின்பற்றி வரும் நவம்பர் 10ம் தேதி முதல், 15ம் தேதி வரை, ரசிகர் சிறப்பு காட்சி உட்பட தினமும் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை காலை 9 மணி முதல், இரவு 1.30 மணிக்குள் முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய படங்கள், குறிப்பாக பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில், ரிலீஸ் ஆன குறிப்பிட்ட நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகின்றன. வாரத்தின் மற்ற நாட்களில் ஒரு கட்டணமும், சனி, ஞாயிறு, விசேஷ நாட்களில் கூடுதலாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதையும் தமிழக அரசு கவனித்து, ஒரே சீரான டிக்கெட் விலை என நிர்ணயித்து, விதிமுறை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்