- Advertisement -
Homeபொழுதுபோக்குவெறும் கதைக்காகவே 96 பட இயக்குனர் பிரேம் குமாருக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த தயாரிப்பாளர்... அடடே...

வெறும் கதைக்காகவே 96 பட இயக்குனர் பிரேம் குமாருக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த தயாரிப்பாளர்… அடடே அது இந்த திரைப்படத்திற்கா… செமதான் போங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதை வாயிலாக சுவாரஸ்யமாக இயக்குபவர் பிரேம்குமார். இவரது இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளிவந்தது 96. விஜய் சேதுபதி திரிஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காதல் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனையோ வந்திருந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது தான் 96 திரைப்படம். இளம் வயதில் சேர்ந்திருந்த காதலர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து பிறகு மீண்டும் அவர்கள் சந்திக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்தி இருந்தார் பிரேம்குமார்.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் வரும். இருவர் மட்டுமே அங்கிருந்தாலும் அங்கு சுவாரசியத்திற்கு எந்த ஒரு பஞ்சமும் இல்லாமல் திரைக்கதையை அந்த அளவுக்கு நன்றாக பிரேம்குமார் கொடுத்திருப்பார்.

இதன் காரணமாகவே அந்த திரைப்படம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 96 திரைப்படத்தை தொடர்ந்து, பிரேம்குமார் அடுத்ததாக மெய்யழகன் படத்தை இயக்கினார். தனது முதல் திரைப்படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை எடுத்த அவர், மெய்யழகனின் உறவுக்கு அதீத முக்கியத்துவம் அளித்திருந்தார்.

அரவிந்த்சாமி கார்த்தி ஆகியோருக்கு இடையேயான உரையாடலும், காட்சிகளும் காண்போரை கண் கலங்க வைத்தது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஒரு பெரிய மைல் கல்லை எட்டவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பிரேம்குமார்.

இதனை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம். சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்கான கதையை அவர் ஐசரி கணேஷிடம் கூறியிருக்கிறாராம். இதைக் கேட்டதும் பெருமகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பிரேம் குமாருக்கு 5 சவரன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளாராம். இந்த நிலையில் விரைவில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சற்று முன்