- Advertisement -
Homeபொழுதுபோக்குகேஜிஎப் 3ம் பாகத்தில் நடிக்கிறாரா நடிகர் அஜீத்குமார்? உலக உருட்டுன்னு ஒண்ணு இருக்கு, கேள்விப்பட்டு இருக்கீங்களா?...

கேஜிஎப் 3ம் பாகத்தில் நடிக்கிறாரா நடிகர் அஜீத்குமார்? உலக உருட்டுன்னு ஒண்ணு இருக்கு, கேள்விப்பட்டு இருக்கீங்களா? – உண்மையை போட்டுடைத்த பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் அஜீத்குமார். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் அஜீத்குமார், ஐதராபாத்தில் வரும் 29ம் தேதி துவங்கும் ஷூட்டிங்கில், சண்டை காட்சிகளில் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார்.

நடிகர் அஜீத்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் துணிவு. இந்த படம் கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையன்று வெளியானது. ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னும் அஜீத்குமார் நடித்த படம் எதுவுமே வெளியாகாத நிலையில், அஜீத்குமார் ரசிகர்கள் பயங்கர அதிருப்தியில் இருந்த வருகின்றனர்.

ஆனால் பிரேக் டவுன் என்ற பெயரில் 1997ம் ஆண்டில் வெளியான ஒரு ஹாலிவுட் படத்தை தான், மகிழ் திருமேனி விடாமுயற்சி என்ற பெயரில் கடந்த 10 மாதங்களாக இயக்கி இருக்கிறார் என்ற தகவலை அறிந்து, அஜீத்குமார் ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். ஈயடிச்சான் காப்பி ஆக, ஹாலிவுட் படத்தை காப்பியடித்து விடாமுயற்சி படத்தை எடுக்க இத்தனை மாதங்களா, என்று நொந்து போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று இணையத்தில், அஜீத்குமார் குறித்த பரபரப்பான தகவல் ஒன்று பரவியது. அதாவது, கேஜிஎப் படங்களை இயக்கிய டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அதற்காக அவர் கேஜிஎப் 3ம் பாகம் படத்தில், கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வேகமாக பரவியது.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிய வந்துள்ளது. ஐதராபாத்துக்கு வருகிற 29ம் தேதி, அஜீத்குமார் செல்ல இருக்கிறார். அங்கு விடாமுயற்சி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் கலந்துக்கொள்ள உள்ளார். அப்போது, அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று டைரக்டர் பிரசாந்த் நீல் தரப்பை சேர்ந்த ஒருவர் போனில் பேசியிருக்கிறார். அவர் பிரசாந்த் நீல் தரப்பை சேர்ந்தவர்தானா, என்பது கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள் இத்தனை தகவல்களை உருட்டோ உருட்டு என உருட்டி இருக்கின்றனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது, பிரசாந்த் நீல் படத்தில் அஜீத்குமார் நடிப்பது என்றால், அவர்கள் நேரில் சந்தித்து பேசுவர். ஐதராபாத் வரும்போது அஜீத்குமாரை சந்திக்க நேரம் கேட்கப் போவது இல்லை. நடக்காத ஒரு சம்பவத்தை வேண்டும் என்றே புரளியாக பரப்பி விட்டுவிட்டனர். உண்மையில் கேஜிஎப் 3 படத்திலோ, பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலோ அஜீத்குமார் நடிக்கவில்லை. அப்படி ஒரு விஷயமே இதுவரை பேசப்படவில்லை, என்று உறுதிபடுத்தி இருக்கிறார்.

சற்று முன்