- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு மூளையில் இருந்து, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டதாக பரவும் தகவல்...

நடிகர் அஜீத்குமாருக்கு மூளையில் இருந்து, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டதாக பரவும் தகவல் – கவலையில் அஜீத் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த 5 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். ஆனால் அந்த பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட மழை, பனிப்பொழிவு, புயல், கடும் குளிர் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அடிக்கடி ஷூட்டிங் பிரேக்கப் செய்யப்பட்டது.

அதனால் 4 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தியும் இன்னும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிலும் திரிஷா, அஜீத்குமார் நடிக்க வேண்டிய காட்சிகள் அதிகமாக உள்ள நிலையில், திரிஷா மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருவதால் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆனால், கடைசி நிலவரப்படி விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன் நிறுவனம் சமீபத்தில்தான் லால் சலாம் படத்தை தயாரித்தது. அதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தையும், அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிப்பதால் நிதி நெருக்கடி ஏற்பட்டு. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே நேற்று நடிகர் அஜீத்குமார் திடீரென, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தகவல் பரவியது. முழு உடல் பரிசோதனைக்காக மட்டுமே அவர் அப்பல்லோவில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. பிறகு, இருதயம் சம்பந்தமான மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு நடந்ததாக தெரிய வந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அஜீத்குமாருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும், அதை அகற்றுவதற்காக அவருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்ததாகவும், இதற்காக சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் 2 சிறப்பு மருத்துவ நிபுணர்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்து, அஜீத்குமார் நலமுடன் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

அதனால் இன்னும் சில வாரங்கள் அவர் மருத்துவமைனயில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில்தான் இருப்பார். பிறகு சில மாதங்கள் வீட்டில் முழு ஓய்வில் இருந்த பிறகுதான், படப்பிடிப்பில் பங்கேற்பார். அதுவும் டாக்டர்கள் அனுமதித்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து அஜீத்குமாரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவின் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தகவலறிந்த அஜீத்குமார் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்