- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்துல விஜய் ரெண்டு பேருன்னா நெனைச்சீங்க, அதுதான் இல்லே - கடைசியில் வெங்கட்பிரபு வெச்சாரு...

கோட் படத்துல விஜய் ரெண்டு பேருன்னா நெனைச்சீங்க, அதுதான் இல்லே – கடைசியில் வெங்கட்பிரபு வெச்சாரு பாருங்க டிவிஸ்ட் – வாய் பிளந்த விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். கோட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய், அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் அப்பாவுக்கு சினேகாவுக்கும், மகனுக்கு மீனாட்சி செளத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே வெங்கட்பிரபு களத்தில் இறக்கி விட்டுள்ளார். குறிப்பாக பிரசாந்த், 1990களில் மிகப்பெரிய முன்னணி ஹீரோவாக இருந்தவர், இந்த படத்தில் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். அதே போல், 1980களில் மிகப்பெரிய முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் மைக் மோகன், இந்த படத்தில் மீண்டும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனர் என 3 விதமான பரிமாணங்களில் இருந்து வரும் பிரபுதேவா, இந்த படத்தில் கோடியோகிராபராகவும், விஜய்க்கு நண்பராகவும் நடித்துள்ளார். இதுதவிர கிச்சா சுதீப், வைபவ், அஜ்மல் போன்ற இளம் ஹீரோ நடிகர்களும் நடித்துள்ளார். லைலா, ரம்யா கிருஷ்ணன், கனிகா போன்ற முக்கிய நடிகைகளுக்கும் இதில் நல்ல கதாபாத்திரங்கள் தரப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில், நடித்துள்ளார். கேமியோ ஆர்ட்டிஸ்ட் ஆக சிவகார்த்திகேயன் இந்த காட்சியில் நடிக்க காரணம், வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பதால் இந்த அதிரடி ஏற்பாட்டை வெங்கட்பிரபு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், நகைச்சுவை கலைவாணர் விவேக் ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த படத்தில் வருகின்றனர்.

- Advertisement -

இத்தனை விஷயங்களுக்கு நடுவே, வெங்கட்பிரபு பரம ரகசியமாக ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். அது என்னவென்று இப்போது தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல். மற்றும் ஒரு முக்கிய தகவலாக இந்த படத்தில் விஜய் மற்றொரு முக்கிய கேரக்டரிலும் வருகிறார்.

ஆக கோட் படத்தில் விஜய் மொத்தம் 3 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அந்த கேரக்டருக்கு ஜோடி கிடையாது. அவர் என்ன மாதிரியான ரோலில் நடித்திருக்கிறார் என்ற தகவலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விஜய் 3 ரோலில் நடிப்பது விஜய், வெங்கட்பிரபு, படக்குழு சார்ந்த முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக, அதை மிக ரகசியமாக வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்