- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரவனுக்குள் ரகசிய கேமரா, மலையாள படம் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் - நடிகை ராதிகா சரத்குமாரிடம்...

கேரவனுக்குள் ரகசிய கேமரா, மலையாள படம் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் – நடிகை ராதிகா சரத்குமாரிடம் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க முடிவு – பரபரப்பில் கோலிவுட் சினிமா

- Advertisement -

மலையாள சினிமா துறையில், ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை வெளியான நிலையில், நடிகைகளுக்கு சில நடிகர்கள், சில இயக்குனர்கள் தந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மலையாள சினிமாவில் பரபரப்பு தீப் பற்றி எரிகிறது.

பாலியல் துன்புறுத்தல் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மலையாள பட இயக்குனர் சித்திக், நடிகர்கள் ஜெயசூர்யா, பாபாராஜூ, முகேஷ் உள்ளிட்ட 17 பேர் மீது இதுவரை பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே நடிகைகள் தந்த புகார்களை, எழுப்பிய குற்றச்சாட்டுகளை மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என அம்மா சங்க நிர்வாகிகள் அலட்சியம் காட்டுவதாகவும் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாக கமிட்டி சேர்ந்த 17 பேரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்த நிலையில், அம்மா சங்கமும் கலைக்கப்பட்டு விட்டது. இன்னும் 2 மாதங்களில் மீண்டும் அம்மா சங்கம் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில், தமிழ் சினிமா மாஜி கதாநாயகி மற்றும் சீனியர் நடிகை ராதிகா, மலையாள சினிமா ஷூட்டிங்கில் நான் கலந்துக்கொண்ட போது, கேரவனில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில், நடிகைகள் உடை மாற்றுவதை சில நடிகர்கள் கூட்டமாக அமர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர் என்ற தகவலை பகிர்ந்து இருந்தார். நான் கேரவன் ஆட்களை அழைத்து திட்டினேன். சக நடிகைகளையும் எச்சரித்தேன் என்று கூறியிருந்தார்.

மேலும் நான் ஓட்டலுக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தேன். அந்த மலையாள படத்தின் பெயரை சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். இப்போது அவர் கூறிய இந்த தகவல், கேரளாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நடிகைகளின் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு, மிக விரைவில் நடிகர் ராதிகா சரத்குமாரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்